“அவர்களை நாங்கள் மதிக்கிறோம் ….. ஆனால் இனி எங்கள் ஆட்டம் வேற மாதிரியாகத்தான் இருக்கும்” – வெற்றி கேப்டன் தவான் பேட்டி!

0
206

ஐபிஎல் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று எட்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹோம் கிரௌண்டாக தத்தெடுக்கப்பட்ட கௌஹாத்தி நகரில் வைத்து நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் பிரப் சிம்ரன் மற்றும் ஷிகர் தவான் அந்த அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக ஆடிய பிரப் சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி வரை இன்று ஆடிய கேப்டன் திவான் 56 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் ஒன்பது பௌண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

- Advertisement -

இவர்கள் இருபது சிறப்பான ஆட்டத்தினால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 197 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக இல்லை என்றாலும் கேப்டன் சாம்சங் ,ஹெட் மேயர் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த அணியில் கேப்டன் சாம்சன் 42 ரன்களும் ஹெட்மேயர் 36 ரன்களும் எடுத்து ஆட்டம் இழத்தனர். துருவ் ஜுரல் இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கி இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பௌண்டரிகளின் உதவியுடன் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணியின் நேத்தன் எல்லிஸ் அபாரமாக பந்துவீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்திற்குப் பின் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான்” ஆட்டத்தின் இறுதி ஓவர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. பதட்டமாகவும் இருந்தது. என்னால் முடிந்தவரை அமைதியாக இருக்க முயற்சி செய்தேன். என்னுடைய பந்துவீச்சாளர்களின் மீது முழு நம்பிக்கையை வைத்திருந்தேன். அவர்களுடன் சேர்ந்து திட்டங்களை ஆலோசித்து செயல்படுத்தினேன். நாங்கள் 197 ரன்களை எடுத்தது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை அழுத்தத்திற்கு உட்படுத்தினர்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “பிரப் சிம்ரன் அதிரடியாக துவங்கி மிகச் சிறப்பான ஒரு துவக்கத்தை அணைக்கு அமைத்துக் கொடுத்தார். நான் வழக்கம் போல் என்னுடைய ஆட்டத்தை ஆடினேன். விரைவாக ரன் எடுக்க முயற்சி செய்தேன். நேத்தன் எல்லிஸ் அருமையாக பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். மேலும் இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் நீண்ட பேட்டிங் வரிசையுடன் ஆடுவதால் எப்போதும் ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே ஆடுகிறோம். எதிரணியின் பந்துவீச்சாளர்களை மதிக்கிறோம் ஆனால் எங்களின் அதிரடி தாக்குதலும் தொடரும் என்று தெரிவித்தார” தவான்.