பயிற்சி செய்கிறோம்; திறமை இருக்கிறது; பிறகு அடிக்க வேண்டியதுதான்! – லார்ட் சர்துல் அசத்தல் பேச்சு!

0
230
Shardul

இன்று தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணி உடன் வெற்றி பெற்றிருந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணிவுடன் தோல்வி கண்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பதினாறாவது ஐபிஎல் சீசனின் ஒன்பதாவது போட்டி நடைபெற்றது!

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுப்பது சந்தேகம் என்ற நிலையில், ஐந்து விக்கெட்டுகளை 89 ரன்களுக்கு இழந்து தத்தளித்து கொண்டு இருந்தது.

- Advertisement -

இப்படி கடுமையான சூழலில் களம் இறங்கிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் ஆட்ட சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக தாக்கி ஆடினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 20 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து, 29 பந்துகளில் 68 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த பெங்களூர் அணிக்கு கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் இளம் அறிமுக பந்துவீச்சாளர் சுயாஸ் சர்மா மூவரும் கடுமையான சோதனைகளை அளித்து, மூவரும் சேர்ந்து பெங்களூர் அணியின் ஒன்பது விக்கட்டுகளை பறித்து 17.4 ஓவர்களில் 123 ரன்களில் சுருட்டினார்கள். கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த சர்துல் தாக்கூர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். விருது பெறும் பொழுது பேசிய அவர் ” இப்படி ஒரு ஆட்டம் எங்கிருந்து வெளியில் வந்தது என்று எனக்கும் தெரியவில்லை. ஆட்டத்தின் போது அந்த நிலையில் ஸ்கோர் போர்டை பார்த்த யாரும் கொல்கத்தா அணி மிகவும் சிக்கலில் இருப்பதாக சொல்லி இருப்பார்கள். ஆனால் உங்கள் ஆழ்மனம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படியான உயர்மட்ட போட்டிகளில் அதை வெளிப்படுத்த திறமையும் வேண்டும்!” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நாங்கள் வலைகளில் கடினமாக பயிற்சி செய்து உழைக்கிறோம். எங்கள் அணி வீரர்கள் த்ரோ டவுன் செய்கிறார்கள். மேலும் எங்களுக்கு ரேஞ்ச் ஹிட்டிங் செய்யவும் பந்துகளை வீசுகிறார்கள். மேலும் உங்களுக்கு இங்குள்ள ஆடுகளங்கள் பற்றியும் தெரியும். அவை எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது இல்லையா? எனவே விளையாட வேண்டியதுதான். இளைஞர் சுயாஸ் மிகச் சிறப்பாக பந்து வீசினார். சுனில் மற்றும் வருணின் தரம் எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்!” என்று கூறி இருக்கிறார்!