“நாங்க 6 வாரம் விளையாடியதற்கு.. 5வது இடம் தகுதியானது” – பாகிஸ்தான் பயிற்சியாளர் ஓபன் ஸ்பீச்!

0
1391
Arthur

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறி இருக்கிறது.

லீக் சுற்றில் மொத்தம் ஒன்பது போட்டிகள் விளையாடிய பாகிஸ்தான் அணி, நான்கு போட்டிகளை வென்று 8 புள்ளிகள் உடன் ரன் ரேட் அடிப்படையில் ஐந்தாவது இடத்தை புள்ளிப்பட்டியலில் பிடித்திருக்கிறது. இதே 8 புள்ளிகள் உடன் ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உலகக்கோப்பைக்கு முன்பாக பெரும்பாலானவர்களின் கருத்துக்கணிப்பில் பாகிஸ்தான் அணி அரைஇறுதியில் இடம் பெறும் நான்கு அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் இறுதியாக ஏமாற்றம் அளிக்கும் விதமாக விளையாடி வாய்ப்பை இழந்து வெளியேறி இருக்கிறது.

பாகிஸ்தான் அணி 2015, 2019, 2023 என தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் அரைஇறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருப்பது, அந்த நாட்டின் ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆதரவாளர்களையும் வெறுப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்களுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

நேற்று தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பேசும் பொழுது “நாங்கள் இங்கு எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடியதாக நினைக்கவில்லை. போட்டியில் சிறந்த முறையில் விளையாடிய நான்கு அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

சீரற்ற தன்மை எப்பொழுதுமே வெற்றியை கொண்டு வராது. இதில் சாக்கு சொல்ல எதுவுமே கிடையாது. உண்மை என்னவென்றால் நாங்கள் போதுமான அளவுக்கு விளையாடவில்லை.

நாங்கள் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறோம். நாங்கள் கடந்த ஆறு வாரமாக விளையாடிய முறைக்கு, நாங்கள் இருக்க வேண்டிய சரியான இடம் அதுதான்.

நாங்கள் மிகவும் இறுக்கமான ஒரு பிரிவாக இந்த உலகக் கோப்பையில் இருந்தோம். நான் பாபர் அசாமுக்கு ஆதரவாக இருக்கிறேன். பாபர் எனக்கு நெருக்கமாகவே இருந்தார்.

அவர் பயணத்தில் தொடர்ச்சியாக அழைத்துச் செல்லப்பட வேண்டிய ஒரு இளைஞர். அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அவர் இன்னும் எல்லா நேரத்திலும் கற்றுக் கொண்டிருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!