“அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை சமன் செய்வோம்” – ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நம்பிக்கை!

0
96

‌ இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 109 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அந்த அணியை முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏமாற்றமாக இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பேட்ஸ்மெண்ட்கள் விரைவாக அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினர். புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். இதன் காரணமாக நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் நேத்தன் லியான் சிறப்பாக பந்துவீசி 64 ரன்களை விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று காலை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இந்தப் போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்” இந்தப் போட்டி துவங்கிய நாளிலிருந்து எல்லா விஷயங்களும் தங்களது அணிக்கு சாதகமாக இருந்ததாக தெரிவித்தார். இந்திய அணி தாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த போது தங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தில் சரியான அளவில் பந்துவீசி அவர்களை கட்டுப்படுத்தியதாக தெரிவித்தார். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் உன்னை மென் முதல் இன்னிங்ஸ் இல் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை 109 ரன்களில் ஆல் அவுட் ஆக உதவியதாக” தெரிவித்தார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய ஸ்டீவன் ஸ்மித்” ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்கள் பார்ட்னர்ஷிப்பாக சிறப்பாக செயல்பட்டனர். ஒரு முனையில் இருந்து ஒரு பந்துவீச்சாளர் ரன்களை கட்டுப்படுத்த மற்றொரு முனையில் வீசிய பந்துவீச்சாளர் தாக்குதல் முறையில் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்திய அணியை கட்டுப்படுத்த பெரிதும் உதவியது. மேலும் உஸ்மான் மிகச் சிறப்பாக முதல் இன்னிங்ஸில் அடித்த அரை சதம் நாங்கள் இந்திய அணியை விட அதிக ஸ்கோர் எடுக்க உதவியது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் உஸ்மான்”என தெரிவித்தார்.

“நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய அணியின் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆட்டம் எங்கள் கைகளில் இருந்து விலகிச் செல்வதாகவே உணர்ந்தேன். மிகச் சிறப்பாக பந்து வீசிய லியான் ஆட்டத்தை மீண்டும் எங்கள் பக்கம் திருப்பி விட்டார். அவரது திறமையான பந்து வீச்சிற்கு 8 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் மட்டுமல்லாது அனைத்து பந்துவீச்சாளர்களுமே இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இந்தியாவில் கேப்டன் பணி செய்வது ஒரு சவாலான காரியம் ஆனால் அதனை நான் ரசித்து செய்கிறேன் . இங்கு நடைபெறும் போட்டிகளில் ஒவ்வொரு பந்தும் ஒரு நிகழ்வு அதே ஆட்டத்தின் சுவாரசியத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. எங்கள் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளத்தின் தன்மையை ஆராய்ந்து இது போன்ற ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை சமன் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறி முடித்தார் ஸ்மித்.

- Advertisement -