இன்னைக்கு எங்களுக்கு பவுலிங் பண்ணவே கஷ்டப்பட்டிருப்பாங்க; நானும் விராட் கோலியும் பிட்சில் என்ன பேசிக்கொண்டோம்? – டு பிளசிஸ் பேட்டி!

0
1258

‘இன்று நாங்கள் மைதானத்தின் பல்வேறு பக்கங்களில் ஷாட்டுகள் அடித்தோம். எங்களுக்கு பவுலிங் செய்வதே கடினமாக இருந்திருக்கும்’ என போட்டி முடிந்தபின் பேசினார்.

மிகமுக்கியமான மற்றும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு கிளாஸன் 51 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்து வரலாறு படைத்தனர். இந்த இலக்கை எட்டுவதற்கு இவர்களது பார்ட்னர்ஷிப் மிக முக்கியமானதாக அமைந்தது.

விராட் கோலி 62 பந்துகளில் 100 ரன்கள் விளாசினர். டு பிளசிஸ் 71 ரன்கள் விளாசினார். 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளசிஸ் கூறுகையில், “சிறப்பாக சேஸ் செய்துவிட்டோம் அல்லவா! இதுதான் இன்று என்னுடைய ரியாக்சன் ஆக இருந்தது.

- Advertisement -

இன்று முதல் இன்னிங்ஸ் முடிந்தபிறகு இந்த பிட்ச் நன்றாக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது என உணர்ந்தேன். மேலும் 200 ரன்கள் என்பது அதிக ஸ்கோராக இருக்கும். அதற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். ஏனெனில் ஸ்பின்னர்களுக்கு இந்த பிட்ச்சில் பந்து பெரிதளவில் டர்ன் ஆகவில்லை.

இந்த போட்டியில் நாங்கள் பேட்டிகில் மிகச்சிறப்பாக செயல்பட்டோம். கடந்த போட்டியில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டோம். ஒட்டுமொத்தமாக இரண்டு டிப்பார்ட்மெண்டிலும் அசத்திவிட்டோம்.

விராட் கோலி உடன் பார்ட்னர்ஷிப் அமைக்கும்பொழுது, நாங்கள் ஒருவரை மற்றொருவர் பாராட்டிக்கொள்வோம். என்ன செய்யலாம்? யாரை டார்கெட் செய்யலாம்? என்று பேசிக்கொள்வோம். இன்று மைதானத்தின் பல பக்கங்களில் நாங்கள் பந்தை அடித்தோம். ஆகையால் இன்று பவுலர்களுக்கு பந்துவீசுவது கடினமாக இருந்திருக்கும். மைதானத்திற்குள்ளும் மைதானத்திற்கு வெளியேவும் நானும் விராட் கோலியும் நல்ல நட்புணர்வோடு இருக்கிறோம்.

அடுத்த போட்டியை சின்னசாமி மைதானத்தில் ஆடுகிறோம். அந்தப் போட்டி எங்களுக்கு இன்னும் சிறப்பானதாக இருக்கப்போகிறது. லீக் சுற்றின் கடைசி போட்டி என்பதால் காண்பதற்கு பலரும் திரளாக வருவார்கள். எங்களுக்கும் அது கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியாக இருப்பதால், எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.” என்றார்.