“தோனி தலைக்குள் என்ன இருக்கிறது என்று தெரிய சாப்ட்வேர் கண்டுபிடிக்க வேண்டும்” – ராகுல் டிராவிட் சுவாரசியமான பேச்சு!

0
875
Dravid

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு கங்குலி கையில் இருந்து மாறி ராகுல் டிராவிட் கைகளுக்கு வந்த பொழுது, அணிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு இருந்தன!

இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக அறியப்படுகிற மகேந்திர சிங் தோனி கங்குலி கேப்டன் பொறுப்பில் இருந்த பொழுது அணிக்குள் அறிமுகமாகி, தான் கேப்டன் ஆவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை ராகுல் டிராவிட் கேப்டன் பொறுப்பில் கீழ் விளையாடினார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய மோசமான நேரமான 2007 ஆம் ஆண்டு சச்சின் அறிவுறுத்தல் படி அப்போது நடந்த முதல் டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட, அவர் தலைமையிலான அணி அந்த உலகக் கோப்பையை வெல்ல, அங்கிருந்து இந்திய கிரிக்கெட் எல்லாம் மாற ஆரம்பித்தது.

மகேந்திர சிங் தோனி மிக நெருக்கடியான அழுத்தம் மிகுந்த நேரங்களில் மிகவும் பொறுமையாக இருந்து அந்த சூழ்நிலைக்கு தேவையான முடிவுகளை எடுத்து பலமுறை கிரிக்கெட் ரசிகர்களையும் வீரர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

அவர் அணியை வழிநடத்தும் விதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களை தாண்டி உலக அளவில் மிகவும் பலரைக் கவர்ந்த ஒன்றாக இப்பொழுதும் இருக்கிறது. அவரது இந்த வழிநடத்துதல் குணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்த ஆண்டு கூட ஐபிஎல் பட்டத்தை வெல்ல வைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் ராகுல் டிராவிட் மகேந்திர சிங் தோனி பற்றி கூறுகையில்
“மனிதர்களின் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன். நுட்பம் மற்றும் வியூகங்கள், தந்திரோபாயங்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே வருகின்றன. மேலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நாங்கள் அதை விளையாட்டில் மேம்படுத்துகிறோம்.

விளையாட்டில் வீரர்களின் உடல் தகுதி, நிபுணத்துவம், பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோக்களின் தரம், விளையாட்டில் மருந்து பொருட்கள் மற்றும் அறிவியல் என எல்லாமே மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதே மாதிரி அழுத்தத்தின் கீழ் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள சாப்ட்வேர் கண்டுபிடிப்பது நன்றாக இருக்கும்.

ஆட்டத்தில் அழுத்த மிகுந்த நேரத்தில் தோனியின் தலைக்குள் என்ன நடக்கிறது? அவர் தீர்வுகளை எப்படி யோசிக்கிறார்? இதெல்லாம் நாம் இந்த முறையில் தெரிந்து கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும்!” என்று ராகுல் டிராவிட் சாப்ட்வேர் கண்டுபிடிப்பு தொடர்பாக கேள்வி முன் வைக்கப்பட்ட பொழுது மகேந்திர சிங் தோனியை வைத்து இவ்வாறு கலகலப்பாக பேசியிருக்கிறார்!