சில பண்ணக்கூடாத தப்பை பண்ணிட்டோம், டெத் ஓவரில் அப்படி பண்ணிருக்க கூடாது – ரோகித் சர்மா பேட்டி!

0
1192

டெத் ஓவரில் சில தவறுகள் செய்துவிட்டோம். இது போன்ற அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய போட்டிகளில் இப்படி நடக்கத்தான் செய்யும். அடுத்த போட்டிகளில் அதை சரி செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார் ரோகித் சர்மா.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக ஷாம் கர்ரன் 55 ரன்கள், ஹர்பிரித் சிங் 41 ரன்கள் ஜித்தேஷ் சர்மா 7 பந்துகளில் 25 ரன்கள் அடித்துக் கொடுத்தனர்.

- Advertisement -

இவ்வளவு பெரிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேமரூன் கிரீன் 67 ரன்கள், சூர்யகுமார் 57 ரன்கள் மற்றும் ரோகித் சர்மா 44 ரன்கள் அடித்து கொடுத்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது அர்சதீப் சிங் அபாரமாக பந்தைவீசி இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை தூக்கினார்.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறுகையில்,

“ஆம், எங்களது டெத் பௌலிங் சற்று ஏமாற்றம் அளிக்கிறது. சில தவறுகளை செய்து விட்டோம். இதுபோன்று அதிக ஸ்கோர்கள் அடிக்கக்கூடிய பிட்ச்சில் இப்படி நடக்கச் செய்யும். இப்போதும் ஒன்றும் மோசமாகிவிடவில்லை. வீரர்கள் சரிசெய்துகொள்ள வேண்டுமே தவிர, தலைகுனிய வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி மூன்று தோல்வி பெற்று சமமாக இருக்கிறோம். இன்னும் இந்த தொடரில் நிறைய போட்டிகள் இருக்கின்றன. அதற்குள் மீண்டும் ஆட்டத்திற்குள் வருவோம். என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் நன்றாக பொறுப்பு எடுத்துக் கொண்டு விளையாடினார்கள். அந்த வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி ஓவரில் அபாரமாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங்கிற்கு எனது பாராட்டுக்கள்.” என பேசினார்.