“நாங்க நேற்று ஒரு பிளான் பண்ணோம்.. இப்ப எனக்கு ஒரு நல்லது நடந்திருக்கு” – கேஎல்.ராகுல் பேட்டி

0
244
Rahul

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கேஎல்.ராகுல் வழக்கம் போல் காயம் அடைந்து வெளியேறினார். அவர் மீண்டும் வருவாரா? ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவாரா? என நிறைய கேள்விகள் இருந்தது.

மேலும் கே.எல். ராகுல் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் துவக்க ஆட்டக்காரராக வந்து மிகவும் சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறுவதற்கு இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இப்படி அவரைச் சுற்றி எதிர்பார்ப்பு மற்றும் விமர்சனங்கள் இரண்டுமே இருந்தது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடருக்கு கடந்த ஆண்டு அவர் திரும்பி வந்த பொழுது, ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக மட்டும் திரும்பி வரவில்லை, சிறந்த விக்கெட் கீப்பராகவும் திரும்பி வந்தார்.

மேலும் தனக்கு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்பாராமல் கிடைத்த முதல் வாய்ப்பை சதம் அடித்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக அமைந்தது. மேலும் அவரது விக்கெட் கீப்பிங் யாரும் எதிர்பாராத வகையில் உலகக் கோப்பையில் இருந்தது. மனரீதியாகவும், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் தொழில்நுட்ப ரீதியாகவும் அவர் மிகச் சிறந்தவராக காயத்திற்கு பிறகு திரும்பி வந்தார்.

இதற்கு அடுத்து அவருக்கு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட அவர் தொடரை வென்றார். மேலும் டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டராக மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த முறை துவக்க ஆட்டக்காரரின் இருந்து மிடில் ஆர்டராக வந்தவர் கடினமான ஆடுகளத்தில் சதம் அடித்து தன் திறமையை நிரூபித்தார்.

- Advertisement -

மேலும் அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. விராட் கோலியின் திடீர் விலகலால் விளையாடும் வாய்ப்பு பெற்றவர், இன்று பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 86 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மேலும் அணியில் தன்னுடைய இடத்தையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பிறகு பேசிய கேஎல்.ராகுல் “தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்தது எனது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. காயத்திற்கு பிறகு ஆறு, ஏழு மாதங்கள் கழித்து நான் விளையாடினேன். பேட்டிங் செய்யும்பொழுது பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவை விட இங்கு ஆடுகளம் வித்தியாசமானது. பந்து தேயத் தேய மிகவும் மெதுவாக மாறிக்கொண்டே இருந்தது. எனவே ஷாட் விளையாட நான் காத்திருக்க வேண்டி இருந்தது.

இதையும் படிங்க : 202 ரன் முன்னிலை.. கேஎல்.ராகுல் ஜடேஜா மாஸ்டர் பேட்டிங்.. நெருக்கடியில் இங்கிலாந்து.. இந்தியா வெற்றி முகம்

மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் ஆடுகளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இதற்கு எப்படி பேட்டிங் செய்யலாம்? என்பது குறித்து நான் புரிந்து கொள்வதற்கு நேரம் கிடைக்கிறது. நாங்கள் நேற்று அணிக் கூட்டத்தில் பேசும் பொழுது, இன்றைய நாள் முழுவதும் நாங்கள் அனைவரும் சேர்ந்து பேட்டிங் செய்து எடுக்க முடிகின்ற ரன்னை எடுக்கத் திட்டம் தீட்டினோம். அதை நன்றாகவே செய்திருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.