தப்பு பண்ணிட்டோம்.. இது மட்டும் நடந்திருந்தா இந்தியாவை வின் பண்ணிருக்கலாம்.. நேபாள் கேப்டன் வருத்தம்.!

0
4859

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வரும் ஆசிய கோப்பையின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் நேபால் அணிகள் நேற்று மோதின. மழை குறுக்கிட்ட இந்தப் போட்டியில் டக்வர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பதினாறாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளுக்கு தகுதிச்சுற்று அடிப்படையில் நேபாள் அணி முன்னேறியது. இதனைத் தொடர்ந்து இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்து விளையாடியது. அந்தப் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய நேபாள் அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பேட்டிங்கின் போது மழை பெய்ததால் 23ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை 20.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்திய அணி. இதன் மூலம் சூப்பர் சுற்றுக்கும் தகுதி பெற்று இருக்கிறது.

சமீபகாலமாகவே ஐசிசி நடத்தும் வளர்ந்து வரும் நாடுகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது நேபாள. ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது. மேலும் 2023 ஆம் ஆண்டின் ஆசிய கோப்பை காண தகுதி சுற்று போட்டியில் யுஏஇ அணியை வீழ்த்தி தகுதி பெற்றது.

இது முதல்முறையாக நேபாள் அணி தகுதி பெற்று இருக்கும் ஆசிய கோப்பையாகும்.நேபாள் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் மோதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணியுடன் துவக்கத்தில் நன்றாக பந்து வீசிய நேபாள் இந்திய அணியுடன் டேட்டிங்கில் சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முதலாவது விக்கெட் இருக்கு 65 ரன்கள் சேர்த்தனர். மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் பின் வரிசை வீரர்கள் பொறுப்புடன் ஆடியதால் 230 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

- Advertisement -

ஆடுகளத்தின் தன்மையால் இன்னும் ஒரு 20 அல்லது 30 ரன்கள் அதிகம் எடுத்திருந்தால் இந்திய அணி சேஸ் செய்வதற்கு அந்த இலக்கு சவாலாக இருந்திருக்கும். அதற்கு ஆடுகளம் இரண்டாவது பாதியில் மெதுவாக திரும்பும் தன்மையும் ஒரு காரணமாக அமைந்திருக்க கூடும் . இதுகுறித்து பரிசளிப்பின் போது பேசிய நேபாள் கேப்டன் இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேட்டி அளித்த நேபாள் கேப்டன் ரோஹித் பாடீல்” எங்கள் அணியின் துவக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கொஞ்சம் பொறுப்பு எடுத்து விளையாடி இருக்கலாம். எங்களின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இன்னும் அதிகமாக 30-40 ரன்கள் சேர்த்திருப்போம். இதனால் 260-270 எடுத்திருக்கலாம். இந்த இலக்கு இந்தியாவிற்கு ஒரு சவாலாக அமைந்திருக்கும். நாங்கள் வெற்றி பெற முயற்சிப்பதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் . ஆனால் அதை மிஸ் செய்து விட்டோம். எங்களது கீழ் வரிசை ஆட்டக்காரர்கள் கடந்த நான்கு முதல் ஐந்து மாதங்களாக பேட்டிங்கில் சீரான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இரண்டாவது பாதையில் சூழ்நிலை பந்து வீச்சுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது . இருந்தாலும் எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்களால் இயன்றவரை சிறப்பாக செயல்பட்டனர்” என தெரிவித்திருக்கிறார்.