நடுவுல நிறைய விக்கெட் விட்டு, கையில இருந்த போட்டியை விட்டுட்டோம் – டேவிட் வார்னர் பேட்டி!

0
662

நல்ல ஆரம்பம் எப்போதும் கிடைத்து விடுகிறது. மிடில் ஆர்டரில் நிறைய விக்கெட்டுகளை விட்டு போட்டியை இழந்து விடுகிறோம் என்று புலம்பியுள்ளார் டேவிட் வார்னர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 67 ரன்கள் அடித்து நல்ல ஆரம்பம் அமைத்துக் கொடுத்தார். மிடில் ஆர்டரில் ஹென்றிச் கிளாசன் 27 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றார். இவருக்கு பக்கபலமாக அப்துல் சமாத் 28 ரன்கள் அடித்து கொடுத்தது 197 எட்டுவதற்கு உதவியது.

இந்த இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் இரண்டாவது பந்திலேயே ஆட்டம் இழந்து இருந்தாலும், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பில் சால்ட் மற்றும் மிச்சல் மார்ஷ் இருவரும் 112 ரன்கள் சேர்த்தனர்.

பில் சால்ட் 59 ரன்கள், மிச்சல் மார்ஷ் 63 ரன்கள் அடித்து சற்று தவறான நேரத்தில் ஆட்டமிழக்க மிடில் ஆர்டர் வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணிக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டனர்.

- Advertisement -

கடைசியில் அக்சர் பட்டேல் 17 பந்துகளுக்கு 29 ரன்கள் அடித்து போராடியும் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்களில் 6 விக்கெடுகள் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே அடித்தனர். இறுதியாக ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கையில் இருந்த போட்டியை இழந்த பிறகு பேட்டி அளித்த டேவிட் வார்னர் கூறுகையில், “மிச்சல் மார்ஷ் மிகச்சிறப்பாக பவுலிங் செய்ததோடு பங்களிப்பை கொடுத்து சென்றார். ஆனால் நாங்கள் போதிய அளவில் பந்துவீச்சில் செயல்படவில்லை. கடைசியில் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். கடைசியில் 9 ரன்கள் குறைவாக அடித்து தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது.

மிடில் ஆர்டரில் எங்களுக்கு நாங்களே சிக்கலாக்கி கொண்டோம். நிறைய விக்கெடுகளை இழந்து விட்டோம். அக்சர் பட்டேல் மிக சிறப்பான டச்சில் இருக்கிறார். மிகச் சிறந்த ஆரம்பம் எங்களுக்கு கிடைத்தது. நடுவில் தவறுகள் செய்து விட்டோம்.” என்றும் பேசினார்.