“நியூசிலாந்து எப்படி வரும்னு நல்லாவே தெரியும்.. அதனால நாங்க..!” – கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பு பேட்டி!

0
4444
Rohit

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில், தொடரை நடத்தும் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத இருக்கிறது.

உலகக்கோப்பை என்று எடுத்துக் கொண்டால் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் சாதனை பெரிய அளவில் இல்லை. நியூசிலாந்து அணியே முன்னணியில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் நியூசிலாந்து கிரிக்கெட்டை பொருத்தவரை எடுத்துக் கொண்டால், அவர்கள் மிகவும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. எனவே அவர்களுக்கு கிரிக்கெட்டுக்கான வீரர்களும் மிகக் குறைவு.

எனவே நியூசிலாந்தில் இருந்து வரும் வீரர்கள் எல்லோரும் எல்லா வேலைகளையும் பெரும்பாலும் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாகவே அவர்கள் எப்பொழுதும் திட்டங்களை நம்பியே களம் இறங்குவார்கள். திட்டத்தை களத்தில் அதிகபட்சம் செயல்படுத்தக்கூடிய அணியாக உலகில் நியூசிலாந்துதான் இருந்து வருகிறது.

இதன் காரணமாக சாதாரண காலங்களில் அவர்களுடைய செயல்பாடு சுமாராக இருந்த போதிலும் கூட, பெரிய தொடர்கள் என்று வரும்பொழுது, அவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அணியாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

அவர்கள் எப்பொழுதும் லீக் சுற்றைத் தாண்டி விடுவார்கள். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நாக்அவுட் போட்டிகளில் விளையாடுவது சற்று சிரமமான காரியம். அது மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

நாளைய போட்டிக்கும் முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “நியூசிலாந்துக்கு எதிராக நாம் விளையாடும் போதெல்லாம் அவர்கள் மிகவும் ஒரு ஒழுக்கமான அணியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட்டை மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்கள்.

மேலும் அவர்கள் எதிர்த்தரப்பின் மனநிலையை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் போட்டிக்கு என்ன கொண்டு வருவார்கள் என்பது குறித்து நாங்கள் தெரிந்தே வைத்திருக்கிறோம்.

அணியின் சூழல் என்பது ஒரு உணர்வுபூர்வமான முயற்சி. அதை ஒன்று இரண்டு வீரர்களின் மூலமாக உருவாக்கி விட முடியாது. பயிற்சி ஊழியர்கள் வரை அனைவரும் சேர்ந்து அதை உருவாக்கி இருக்கிறார்கள். அணியின் சூழலை காப்பதற்கு நாங்கள் அனைத்தையும் செய்திருக்கிறோம்.

என்னை பொருத்தவரை இங்கு உலகக்கோப்பைதான் முதலிடத்தில் இருக்கிறது. எனவே வடிவங்கள் தாண்டி எல்லா வடிவங்களிலும் நாம் முதன்மையாக இருக்க வேண்டியது அவசியம்.

உலகக்கோப்பையில் முதல் ஆட்டத்தில் இருந்து கடைசி ஆட்டம் வரை விளையாடும் பொழுது அழுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் நாங்கள் அழுத்தத்தை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. எனவே நாங்கள் இதை தொடர விரும்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!