ரிச்சர்ட்ஸ்,சச்சின்,கோலி செய்யாததை செய்து காட்டிய வீரர்- கபில்தேவ் புகழாரம்!

0
424

இந்திய அணிக்காக  1983 ஆம் ஆண்டு  முதல் முதலாக  உலக  கோப்பையை  வாங்கி தந்தவர்  கபில்தேவ்.இந்தியாவில் இருக்கும்  தலை சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எடுத்தாலும் .அவர் பேர் இல்லாமல் இருக்காது.

இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில்  முதல் இடத்தில்  இருப்பவர். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாகவும் இருந்தவர். தற்போது கிரிக்கெட் விமர்சகராக பணியாற்றி வருகிறார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு  இடையே நடைபெற்ற  டி20 கிரிக்கெட் போட்டியை பற்றி  பேசியுள்ள  கபில்தேவ  இந்திய அணியின் இளம் வீரர்களின்  பேட்டிங்கை வெகுவாக  பாராட்டியுள்ளார்.

குறிப்பாக  இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்  டி20 பிளேயர் சூரியகுமார் யாதவின்  டேட்டிங்கை பாராட்டிய கபில் தேவ்.அவரை  நூற்றாண்டிற்கு ஒரு முறை  வரக்கூடிய கிரிக்கெட் வீரர் என்று புகழ்ந்துள்ளார்  இது குறித்து விரிவாக பேசியுள்ள கபில்தேவ்  நாம் கிரிக்கெட்டில் விவியன் ரிச்சர்ட்ஸ்   சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி  போன்ற வீரர்களை பார்த்திருக்கிறோம்  அவர்களெல்லாம்  கிரிக்கெட்டில் ஏராளமான ரண்களை அடித்து  தங்கள் பெயரை கிரிக்கெட் வரலாற்றில்  இடம்பெறச் செய்தவர்கள் . ஆனால் சூரியகுமார் யாதவ்  தன்னுடைய  அசாத்தியமான ஆட்டத்தின் மூலம்  கிரிக்கெட்  ஆடக்கூடிய விதத்தை  மறுவரை செய்யக்கூடிய ஒரு வீரர்  அதனால்தான் அவரை ஒரு நூற்றாண்டு காண கிரிக்கெட் வீரர் என்று  பாராட்டுவதாக தெரிவித்துள்ளார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய கபில் தேவ்  அவருக்கு ஸ்டம்புகளுக்கு பின்னால் அதிக ரன்களை குவிக்கும் அதே வேளையில் ஒரு பந்துவீச்சாளர் தன்னுடைய லைனில் இருந்து மாற்றி வீசினாலும்  அந்தப் பந்துகளையும்  மிட் ஆன் அல்லது  மிட் விக்கெட் திசைகளில் ரன் செய்வதற்குரிய திறமை அவரிடம் இருக்கின்றது  என்று கூறியிருக்கிறார்.இவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் ஆடும் போது  ஒரு பந்துவீச்சாளரால்  பயப்படுவது தவிர வேறொன்றும் செய்ய முடியாது  என்றும் கூறினார்.

நாம் ஏபி.டிவில்லியர்ஸ்  ரிக்கி பாண்டிங்  சச்சின் டெண்டுல்கர்  விராட் கோலி என  எத்தனையோ பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதை பார்த்திருக்கிறோம்.ஆனால் இவர் அவர்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு ஆடும் விதம்  இவரை மற்றவர்களிடமிருந்து  தனித்து காட்டுகிறது  என்று கூறினார் கபில் தேவ் .

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள  ஒரு நாள் போட்டி தொடரிலும்  சூரியகுமார் யாதவ் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது . மேலும் அவர்  இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதன் மூலம்  உலக கோப்பை காண இந்திய அணியில்  தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்யலாம் .