எங்கக்கிட்ட ஒழுக்கம் இல்லை.. எப்படியோ நேபாள்கிட்ட தப்பிச்சிட்டோம் – இந்திய அணி பயிற்சியாளர் வெளிப்படையான வருத்தம்!

0
665
ICT

நேற்று இந்திய நேபாள் அணிகள் ஆசியக் கோப்பை 16வது தொடரின் முதல் சுற்றின் கடைசி போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா இந்த முறை பந்துவீச்சை தேர்வு செய்து கொண்டார். இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிய போட்டிகளுக்கு செல்லும் முன்பாக இது நல்ல பயிற்சியாக அவர்களுக்கு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய வேகப்பந்து வீச்சை முகமது சமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் நல்லபடியாகவே ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கித் தந்த வாய்ப்பை விராட் கோலி ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிஷான் மூவரும் வீணடித்தார்கள். மூன்று கேட்ச் வாய்ப்புகளுமே மிக எளிமையானது என்பதுதான் இதில் கவலைப்பட வேண்டிய விஷயம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நேபால் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக தொடங்கினார்கள் என்றாலும், மொத்த அணியாக அவர்களால் ஆட்டத்தை சிறப்பாக முடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் 230 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

பின்பு விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பு இல்லாமல், மலழையின் காரணமாக மாற்றி அமைக்கப்பட்ட 23 ஓவருக்கு 145 ரன்கள் என்கின்ற இலக்கை 20 புள்ளி ஒன்று ஓவரில் அனாயசமாக எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு குழுவில் இரண்டாவது இடம் பிடித்து தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு பற்றி பேசி உள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது “பாகிஸ்தானுடன் விளையாடிய விக்கெட்டை விட இந்த விக்கெட் விளையாடுவதற்கு நன்றாக இருந்தது. நாங்கள் இன்னும் ஒழுக்கமாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் கைவிட்ட மூன்று கேட்சுகள் அவர்களுக்கு உதவியாக இருந்தது.

அவர்கள் நன்றாக பேட் செய்தார்கள். நாங்கள் கைவிட்ட கேட்ச்கள் எங்களுக்கு எதிராக பெரிதாக எதுவும் மாறவில்லை என்பது நல்லது. அதே சமயத்தில் நாங்கள் இலக்கை நோக்கி எப்படி பேட்டிங்கில் பதிலளித்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

விக்கெட் கீப்பரை பொறுத்தவரை இசான் கிஷான் நன்றாகவே விளையாடினார். அவர் சிறப்பாகவே தொடர்ந்தும் விளையாடி வருகிறார். ஆனால் கேஎல்.ராகுலும் அவருடைய இடத்தில் இரண்டு வருடங்களாக நன்றாகவே விளையாடியிருக்கிறார். இது ஒரு நல்ல பிரச்சனை. இறுதி முடிவை அணி நிர்வாகம் எடுக்கும்.

வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு அணிகளுக்கு எதிராக, வெவ்வேறு காம்பினேஷன் கொண்ட அணியை களம் இறக்குவதற்கான 15 பேர் கொண்ட வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஷர்துல் தாக்கூர் எங்களுக்கு பேட்டிங் ஆழத்தை தருகிறார். நாங்கள் முழுமையாக வேகப்பந்துவீச்சாளர்களுடன் செல்ல வேண்டும் என்றால் வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளருடன் விளையாட அக்சர் படேல் இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!