எந்த கிரவுண்டுக்கு போனாலும் சிஎஸ்கே பேன்ஸ் தான் அதிகமா இருக்காங்க, டீம்ல தோனி இருந்தாலே தனி பலம் – ஆட்டநாயகன் டெவான் கான்வெ பேட்டி!

0
958

என்னுடைய அணுகுமுறை எல்லாம் மிகவும் சிம்பிள் ஆனது. அதுதான் எனக்கு உதவுகிறது. அதைவிட ரசிகர்களின் சப்போர்ட் இன்னும் நம்பிக்கையை கொடுக்கிறது. தோனி அணியில் இருந்தாலே அது கூடுதல் பலமாகவும் இருக்கிறது என்று பேசி உள்ளார் ஆட்டநாயகன் டெவான் கான்வெ.

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு ஒரு இன்னிங்சில் 3ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

- Advertisement -

227 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு மேக்ஸ்வெல் மற்றும் டு ப்ளசிஸ் இருவரும் சேர்ந்து அபாரமாக விளையாடி சிஎஸ்கே பவுலர்களை கதன்கலங்க வைத்தனர். இவர்களது விக்கெட் போனபிறகு, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் சிஎஸ்கே அணியில் 218 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

45 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடித்து 83 ரன்கள் குவித்த டெவான் கான்வெ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பின் பேட்டியளித்த கான்வெ பேசியதாவது:

“இன்றைய போட்டி சிஎஸ்கே அணி சாதகமாக முடிந்த விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் எனக்கு சரியாக அமையவில்லை. நான் எதிர்பார்த்தவாறு அடிக்க முடியவில்லை. இன்றைய போட்டியில் பெற்ற வெற்றி ஒட்டுமொத்த அணியும் இணைந்து ஒன்றாக செயல்பட்டதற்கு கிடைத்தது.

- Advertisement -

இன்றைய போட்டியில் என்னுடைய பேட்டிங் அணுகுமுறையை மிகவும் எளியதாகவே வைத்துக் கொண்டேன். ஏனோதானோ என்று அடிக்காமல் சரியான கிரிக்கெட் ஷாட் அடிக்க முயற்சிக்க வேண்டும் என்று விளையாட்டினேன்.

பவுலர்களால் நான் அழுத்தத்தில் இருக்கும் பொழுது, பந்திருக்கு ஏற்றவாறு அணுகுவேன். குறிப்பாக என்னிடம் இருக்கும் பெஸ்ட் ஷாட் எது என்பதை முடிவு செய்து விளையாடுவேன். மேலும் எனது கால்களை நகர்த்திக் கொண்டே இருந்து பந்துவீச்சாளர்களால் கணிக்க முடியாதவாறு நடந்து கொண்டால், அவர்களால் சரியான லைனை பிடிக்க முடியாது. அதைப் பயன்படுத்தி என்னுடைய பெஸ்ட் ஷாட் விளையாடுவேன். இன்றைய போட்டியில் அதை மட்டும் தான் செய்தேன்.

சிஎஸ்கே அணியில் இது எனக்கு இரண்டாவது வருடம். கடந்த வருடத்தை விட இன்னும் சிறப்பானதாகவே இருக்கிறது. சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருக்கின்றனர். நல்ல கிரிக்கெட்டிற்கு சப்போர்ட் செய்கின்றனர் எங்கு சென்றாலும் சிஎஸ்கே ரசிகர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். தோனி நம்முடைய அணியில் இருந்தால் இது சாத்தியமே. நாங்கள் மிகவும் பாக்கியவான்கள்.” என்றார்.