“இன்னொரு சூரியகுமார் நமக்கு இருக்காரு.. அவர டி20 உலக கோப்பைக்கு கூட்டிட்டு போங்க!” – இர்பான் பதான் பேச்சு!

0
1487
Irfan

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்து அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால், அதை நோக்கி அந்த உலகக் கோப்பையில் விளையாடும் 20 அணிகளும் தயாரிப்பில் இறங்கி இருக்கின்றன.

தற்பொழுது மற்ற அணிகளை விட இந்தியாவுக்கு ஒரு புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது. இங்கு நிறைய வீரர்கள் இருப்பதால் யாரை தேர்ந்தெடுப்பது என்கின்ற நல்ல தலைவலி உருவாகி இருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடுவார்களா? என்பது தெரியாததால் இந்த தலைவலி இன்னும் அதிகரிக்கிறது.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தவிர்த்து விக்கெட் கீப்பர்கள் என எடுத்துக் கொண்டால் இசான் கிஷான், ஜிதேஷ் சர்மா, கேஎல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதில் கேஎல்.ராகுல் டி20 கிரிக்கெட்டில் இருந்து அனேகமாக வெளியேற்றப்பட்டு விட்டார் என்பதாக தெரிகிறது. ரிஷப் பண்ட் காயத்திலிருந்து வேகமாக மீண்டு வருகிறார். இவர் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் மட்டும் இல்லாமல், பிளேயிங் லெவனிலும் யார் இடம் பெற வேண்டும்? என்று இர்பான் பதான் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து இர்பான் பதான் கூறும் பொழுது “நான் இதே ஜிதேஷ் சர்மாவை ஆதரிப்பேன். இஷான் கிஷான் விளையாட வேண்டும் என்றால் அவர் மேல் வரிசையில் விளையாட வேண்டும். ஆனால் மேல் வரிசையில் விளையாடுவதற்கு இந்தியாவில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே அவருக்கு இடம் கடினம்.

- Advertisement -

இஷான் கிஷான் தன்னுடைய இடத்தை உருவாக்குவது மிகவும் கடினம் என்பது என்னுடைய நம்பிக்கை. அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் விளையாடுவதற்கு கடினமான புதிய பந்து தேவைப்படுகிறது. அவரால் பின் வரிசையில் விளையாட முடியாது.

ஒருவேளை அவர் மிடில் வரிசையில் விளையாட வேண்டும் என்றால் அங்கு ஸ்பின் வீசப்படும். இது இஷான் கிஷானுக்கு நெருக்கடியாக அமையலாம். ஆனால் ஜிதேஷ் சர்மா கொஞ்சம் கிரியேட்டிவ் பிளேயர். அவர் சூரியகுமார் போன்றவர். அவர் பல்வேறு வகையான ஷாட்களை விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நன்றாக விளையாடியிருக்கிறார். அவர் பினிஷிங் இடத்தில் அவருடைய வேலையை சரியாக செய்கிறார். சமீபத்தில் சிறந்த இரண்டு இன்னிங்க்களை இந்தியாவுக்கு விளையாடினார். அவருடைய ஸ்டிரைக் ரேட்நன்றாக இருக்கிறது. மேலும் அவர் வேகம் மற்றும் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடுகிறார்!” என்று கூறியிருக்கிறார்!