“எங்களுக்கு ஒரு தலைவலி இருக்கு.. ஆனா மார்ஸ் பயமுறுத்த போறாரு!” – வெற்றிக்கு பின் கம்மின்ஸ் எச்சரிக்கை பேச்சு!

0
409
Cummins

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி சரியாக ஆரம்பிக்கவில்லை.

ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்தது. ஆனால் இரண்டு தோல்விகள் என்ற இல்லாமல்ஆஸ்திரேலியாவின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் எடுத்ததும் ஆஸ்திரேலியா அணியின் மீதுதான் அதிகப்படியான அழுத்தம் இருந்தது. எனவே ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போனால் ஆச்சரியப்பட கிடையாது என்கின்ற பேச்சுகள் வந்தது.

இந்த நிலையில் அதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளை தற்போது வென்று, புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. பதினாறாம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இன்று லீக் சுற்றில் தனது கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா 307 ரன்கள் இலக்கை, இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, மார்ஸ் 177 ரன்கள் குவிக்க, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது “இந்த வெற்றி மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த விக்கெட் விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். தற்பொழுது எங்கள் அணியில் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வீரர்களும் விளையாடிவிட்டோம்.

அடுத்து அரையிறுதியில் விளையாட கொல்கத்தா செல்லும்பொழுது, யாரை தேர்வு செய்வது என்பது குறித்து ஒரு நல்ல தலைவலி இருக்கும்.

மார்ஸ் மிக அழகாக விளையாடினார். அவர் விளையாடிய டெம்போ நிலையாக இருக்கிறது. இந்த வாரத்தில் அவர் பெரிய ஆபத்தான வீரராக இருக்கப் போகிறார். தொடர்ந்து ஏழு ஆட்டங்களை வெல்வதும், 300க்கும் மேற்பட்ட ரன்களை துரத்துவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!