“2011 உலக கோப்பையில எங்களுக்கு அந்தவொரு அதிர்ஷ்டம் இருந்துச்சு.. இப்பவும் இருந்தா நல்லது!” – சேவாக் வெளியிட்ட எதிர்பார்ப்பு!

0
1170
Sehwag

இந்திய அணி இறுதியாக ஒரு உலகக்கோப்பை தொடரை வென்றது 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடர்தான்.

மீண்டும் உலகக் கோப்பையை உள்நாட்டில் வைத்து வெல்ல ஒரு அற்புதமான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட்டுக்கு உலகக்கோப்பை இல்லாமல் இருந்து வருகிறது. இதை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீர்த்து வைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு இந்திய அணி வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்து வருகிறது.

கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பொழுது, மொத்தம் காலிறுதியோடு சேர்த்து மூன்று நாக்அவுட் போட்டிகள் இருந்தன. இதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை என மூன்று அணிகளையும் வென்று இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவில் மிகக் கடினமான நேரத்தில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஸ் ரெய்னா இணைந்து விளையாடி அணியை வெல்ல வைத்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக 260 ரன்கள் மட்டும் பெற்று, அதை இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பாதுகாத்தார்கள். இந்திய மண்ணில் இந்த ரன்னை வைத்து வென்றது பெரிய விஷயம். இறுதிப் போட்டியில் கம்பீர் தோனி கோப்பையை வெல்ல காரணமானார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் நாளை மும்பையில் நியூசிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கும் அரையிறுதியில் இந்திய அணியின் வெற்றியை எதிர்பார்த்து நாடு முழுக்க மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது.

இதுகுறித்து 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “நீங்கள் நன்றாக விளையாட வேண்டும். எப்பொழுதும் அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க முடியாது. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை.

பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் 260 ரன்கள் மட்டுமே அடித்துதான் வெற்றி பெற்றோம். எங்களுக்கு அந்த போட்டியில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. மேலும் எங்கள் பந்துவீச்சாளர்களும் நன்றாக செயல்பட்டார்கள். இந்தியா சிறப்பாக விளையாடுகிறது ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் நன்றாக இருக்கும்.

ரோகித் சர்மா அதிரடியான தொடக்கத்தை இந்திய அணிக்கு நீண்ட காலமாக கொடுத்து வருகிறார். அவர் கேப்டனாக இருப்பதால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க பொறுப்பு எடுத்து விளையாடுகிறார். கில்லை அவர் கவனித்து பாதுகாக்கும் விதம் ஆச்சரியமாக!” இருக்கிறது என்று கூறி இருக்கிறார்!