“மீதி இருக்கும் இரண்டு போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்” – ஆர் சி பி அணியின் கேப்டன் ஃபாப் நம்பிக்கை!

0
207

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதின . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது .

அதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .

- Advertisement -

இந்த தோல்வியின் மூலம் அந்த அணியின் ரன் ரேட் சரிவை சந்தித்திருக்கிறது . ஆனால் இது பெங்களூர் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு தற்போது அதிகமாக இருக்கிறது .

முன்னதாக இந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தனர் . இறுதி ஓவர்களில் அனுஜ் ராவத் 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார் . இதன் மூலம் வலுவான இலக்கை நிர்ணயிக்க பெங்களூர் அணிக்கு உதவியாக இருந்தது .

அந்த அணியின் பந்து வீச்சில் பிரேஸ்வெல் மற்றும் கரண் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் பர்னல் மூன்று விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய பெர்னல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் .

- Advertisement -

போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ஃபாப் ” இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடும் சவால் ஆனதாக இருந்தது . பவர் பிளே ஓவர்களின் போது நானும் விராட் கோலியும் எப்படியாவது அணி 160 ரன்கள் எடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம் . பதினைந்தாவது ஒவ்வொரு வரை எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது . ஆனாலும் ஒரு சிறு தடுமாற்றத்தை சந்தித்தோம் . இறுதியில் அனுஜ்ராவத்தின் அதிரடி ஆட்டத்தால் 170 ரன்கள் எடுத்தோம் . இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் எங்களது நேற்று உயர்ந்திருக்கிறது . இது எங்களுக்கு ஒரு சிறப்பான விஷயம்” என்று தெரிவித்தார்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த ஆடுகளத்தில் பிரேஸ்வெல் ஒவ்வொரு நாளும் பந்து வீச வேண்டும் என்று விருப்பப்படுவார் . அவரது பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது . ஷபாஷ் அஹமது ஒரு இடது கை பந்துவீச்சாளருக்கான வாய்ப்பாக அணியில் வைத்திருந்தோம் . அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர் . இந்த வெற்றியின் மூலம் அடுத்த இரண்டு ஆட்டங்களுக்கும் தேவையான நம்பிக்கை வீரர்களுக்கு கிடைத்திருக்கிறது எனக் கூறி முடித்தார் .