4 க்கு 4 ஜெயிக்கணும்; கண்டிப்பா வின் பண்ணி டோர்னமெண்ட்குள்ள திரும்ப வருவோம் – தோல்விக்கு பிறகு பேசிய எய்டன் மார்க்ரம்!

0
290

ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் சென்றும் தோல்வி அடைந்துவிட்டோம். கடைசி 4 போட்டிகளில் அனைத்தையும் வெற்றி பெற்று மீண்டும் தொடருக்குள் வருவோம் என்று பேட்டி அளித்துள்ளார் எய்டன் மார்க்ரம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறி 171 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

சொந்த மைதானத்தில் இந்த இலக்கை சேஸ் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மிடில் ஓவர்களில் எய்டன் மார்க்ரம்(41) மற்றும் ஹென்ரிச் கிளாஸன்(36) இருவரும் போராடினர். ஆனால் இவர்களது போராட்டம் கடைசி வரை நீடிக்கவில்லை. விக்கெட் இழந்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டபோது, கொல்கத்தா அணிக்காக வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். ஸ்பின்னருக்கு கொடுத்த இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் சரியான நேரத்தில் பார்மில் இருந்த அப்துல் சமாத் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி தூக்கினார்.

கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார் வருண் சக்ரவர்த்தி. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே அடித்தது.

- Advertisement -

எளிதாக வெற்றிபெறக்கூடிய போட்டியை இழந்தபிறகு பேட்டியளித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில்,

“இந்த முடிவை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது. தொடரின் கடைசி பகுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், தவறுக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் நாங்கள் இந்த நேரத்தில் தான் தவறு செய்து விட்டோம். கிளாசன் மிகச்சிறப்பாக விளையாடினார். நான் ஆரம்ப கட்டத்தில் சற்று தடுமாறி, அதன் பிறகு எனது ஆட்டத்திற்கு வருவதற்குள், நாங்கள் சில ரன்களை தவறவிட்டோம்.

பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு எட்டக்கூடிய ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தினார்கள். பேட்டிங்கில் நல்ல துவக்கம் கிடைத்தது. இந்த ஸ்கோரை எட்டுவதற்கான திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. மீண்டும் பயிற்சியிலிருந்து திட்டங்களை மாற்றவேண்டும்.

கடைசி நான்கு போட்டிகளில் நான்கு செயல்பட்டு வெற்றிகளை பெறவேண்டும் என்கிற சூழலில் இருக்கிறோம். இந்த அழுத்தமான சூழலில் எங்களுடைய சிறந்த ஆட்டம் வெளிப்படும் என்று நம்புகிறேன். நிச்சயம் வெற்றி பெற்று மீண்டும் தொடருக்குள் வருவோம்.” என்று நம்பிக்கையுடன் பேசினார்.