பும்ராவை நான் தான் டீமுக்குள்ள வரவேணாம்ன்னு சொன்னேன்; என்ன நடந்தது? – ரோகித் சர்மா பேட்டி!

0
146

பும்ரா விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் என்று நாம் தான் வலியுறுத்தினேன் என பேசியுள்ளார் ரோகித் சர்மா.

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

சென்ற டிசம்பர் மாதமே பும்ரா குணமடைந்து விட்டார் என இந்திய தேசிய அகடமி தேர்வு குழு உறுப்பினருக்கு அறிவிப்பு கொடுத்தது. உடனடியாக இலங்கை அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அந்த முடிவை பின் வாங்கி இலங்கை அணி ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அடுத்ததாக வந்த நியூசிலாந்து தொடரிலும் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை.

பும்ரா குணமடைந்து இத்தனை நாட்கள் ஆகியும் ஏன் அவர் சேர்க்கப்படவில்லை? எதற்காக இப்படி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது? என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா கூறுகையில்,

- Advertisement -

“முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் என்பது மற்ற காயங்களை விட அதிதீவிரமானது. ஒருமுறை வந்துவிட்டால் அடிக்கடி மீண்டும் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. பும்ரா விஷயத்தில் செப்டம்பர் மாதம் இப்படித்தான் அவசரப்பட்டு உள்ளே எடுத்து வந்தோம். அது பாதகமாக முடிந்து விட்டது.

மீண்டும் மூன்று, நான்கு மாத காலம் அவரால் எந்தவித போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. அது போன்ற தவறு திரும்பவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, குணமடைந்து விட்டாலும் கூடுதல் ஓய்வு இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரை எடுக்கவில்லை.

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் நிச்சயம் வருவார் என்று எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது. மேலும் இந்த வருடம் இன்னும் நிறைய போட்டிகள் இருப்பதால் போதிய அளவு ஓய்வை இப்போதே அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்கிற அடிப்படையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.” என்றார்.