“இவங்க மட்டும் வேணாம் தெய்வமே”.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு பயம் காட்டும் 3 வீரர்கள்!

0
499
Dhoni

கிரிக்கெட் உலகில் நம்பர் 1 டி20 லீக்காக இருக்கும் ஐபிஎல் தொடரில், நம்பர் 1 அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ்.

வணிகம், சந்தை மதிப்பு, உலகம் தழுவிய ரசிகர் பட்டாளம், மேலும் அதிக முறை கோப்பையை கைப்பற்றியது, அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்றது, அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என ஒட்டுமொத்தமாக சேர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டி20 லீக்குகளில் மிகப்பெரிய அணியாக உலக அளவில் விளங்குகிறது.

- Advertisement -

இந்த அணியின் வெற்றிக்கு கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அதிக பங்கை கொடுத்தாக வேண்டும். ஏனென்றால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் உறவு ரீதியான கலாச்சாரம் என்பது தோனி உருவாக்கியது. இதுதான் அந்த அணியின் வெற்றிக்கு மையமாக இருக்கிறது.

மேலும் வீரர்களை வாங்குவது குறித்தும், கிடைக்கும் வீரர்களிடமிருந்து சிறப்பானவற்றை எடுப்பதிலும், மகேந்திர சிங் தோனியின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருகிறது. ஒட்டு மொத்தமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக மதிப்பு வாய்ந்த வீரர் மகேந்திர சிங் தோனிதான்.

இவர்கள் எப்படிப்பட்ட வீரர்களை வாங்கினாலும், அவர்களிடமிருந்து எப்படியாவது சிறந்ததை எடுக்க முடிந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களின் பயத்திற்கும் காரணமாக இருக்கிறது. நடக்க இருக்கும் மினி ஏலத்தில் சில வீரர்களை அவர்கள் வாங்க கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஜெயதேவ் உனட்கட் :
லக்னோ அணியால் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்திய இடக்கை வேகபந்துவீச்சாளரான இவர், ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 94 போட்டிகளில் 91 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். முக்கியமான நேரங்களில் ரன்களை வாரி கொடுப்பதால், இந்த ஏலத்தில் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்க கூடாது என ரசிகர்கள் வேண்டுகிறார்கள்.

மனிஷ் பாண்டே :
இந்தியாவிற்கு சில காலம் விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இவர் பார்க்கப்பட்டார். ஆனால் தற்பொழுது இவரது பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது. 170 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள இவரது ஸ்ட்ரைக் ரேட் 120 மட்டுமே. இவர் அடுத்த கேதார் ஜாதவ் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அஞ்சுகிறார்கள்.

கருண் நாயர் :
ஒட்டுமொத்தமாக 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள இவரது ஸ்ட்ரைக் ரேட் 127. மனிஷ் பாண்டேவை விட அதிகமாக இருந்தாலும் கூட, இவரால் தாக்கம் தரக்கூடிய ஆட்டத்தை விளையாடி காட்ட முடியவில்லை. எனவே இவரை அம்பதி ராயுடு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சி செய்ய வாய்ப்பு இருந்தால் அது கூடாது என சென்னை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.