“அவங்க ரெண்டு பேரும் விளையாடியது எங்களுக்கே புரியல.. பாவம் இங்கிலாந்து என்ன செய்யும்?” – நியூசிலாந்து கேப்டன் அசத்தல் பேச்சு!

0
4401
Latham

இன்று துவங்கியிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கக்கூடிய அணியாக பலராலும் கணிக்கப்பட்ட அணி இங்கிலாந்து.

இதற்கு ஏற்றார் போல் இங்கிலாந்து அணி கடந்த சில வருடங்களாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகவும் அபாயகரமான அணியாக இருந்து வருகிறது. அதிரடியான அணுகுமுறையை கொண்டிருப்பதோடு அவர்களின் பேட்டிங் நீளம் மிகவும் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இப்படிப்பட்ட இங்கிலாந்தை உலகக் கோப்பையின் துவக்க போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் 36.2 ஓவர்களில் 282 ரன்களை விரட்டி வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

வெற்றிக்குப் பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில் “இது ஒரு அருமையான நாக். ரச்சின் மற்றும் கான்வே இருவரும் சிறந்த பார்ட்னர்ஷிப் கொண்டிருந்தார்கள். இப்படியான விக்கெட்டில் இங்கிலாந்தை 280 ரன்கள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சி. இந்தப் பெருமை எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு சேரும்.

பயிற்சி போட்டிகளில் இருந்து நாங்கள் சிறந்த முறையில் தயாரானோம். கடந்த ஓராண்டுகளாகவே நாங்கள் இப்படிப்பட்ட ஆடுகளத்தில் விளையாடி பயிற்சி பெற்றிருக்கிறோம். எங்களுடைய இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் அவர்களுடைய வேலையை மிகச் சிறப்பாக செய்தார்கள்.

- Advertisement -

அவர்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி எங்களை தாக்கி விளையாடும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் சரியான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றினோம்.

ஒரு கட்டத்தில் சிறந்த நிலையில் இருந்த அவர்களை 280 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மிகவும் சிறப்பான விஷயமாக எங்களுக்கு அமைந்தது.

எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஷாட்களை விளையாடினார்கள். அதுவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் ஷாட் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. அவர்கள் பந்து வீசியதற்கு அருமையான எதிர்வினையாற்றினார்கள்.

நிச்சயமாக அவர்கள் இருவரும் விளையாடிய விதம் திட்டமிடப்பட்ட ஒன்று கிடையாது. அவர்கள் விளையாடிய பொழுது நல்லவிதமாக உணர்ந்து இருக்க வேண்டும். அதனால் அவர்கள் தொடர்ந்து அப்படி விளையாடியிருப்பார்கள். ரவீந்திரா நல்ல இன்னிங்ஸ் விளையாடினார். அவர் வெளியேறிய அதிரடியாக விளையாடியது சிறந்த ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!