“ஆஸியை நம்ப மாட்டோம்.. அவங்க யாருனு தெரியும்.. இப்ப சும்மா நடிக்கிறாங்க!” – ஸ்ரேயாஸ் வெளிப்படையான தைரியமான பேச்சு!

0
12758
Shreyas

இந்த ஆண்டு ஏற்கனவே இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தது.

அந்தத் தொடரில் முதல் போட்டியில் தோற்ற ஆஸ்திரேலியா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக மூன்றாவது போட்டியில் இந்திய அணியை ஸ்டார்க் அனாயசமாக வீழ்த்தினார்.

- Advertisement -

ஆனால் தற்போது வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி, நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோற்றுத் தொடரை இழந்திருக்கிறது.

இந்தத் தோல்வியை உண்மையாகவே ஏற்று ஆஸ்திரேலிய வீரர்கள் பேசி வருகிறார்கள். நேற்றைய போட்டிக்கான கேப்டன் ஸ்மித் அடுத்த போட்டியில் திரும்பி வருவோம் என்றெல்லாம் கூறி இருந்தார்.

ஆனால் சமூக வலைதளத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணி வேண்டும் என்றே திட்டமிட்டு விளையாடத் தெரியாதது போல் நடிக்கிறது என்று பதிவு செய்து வந்தார்கள். காரணம் இந்தியாவை உலகக்கோப்பை முதல் போட்டியில் தோற்கடிப்பதற்கான திட்டம் இது என்று கூறினார்கள்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும், ஆஸ்திரேலியா அணி பற்றி கூறும் பொழுது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கூறுவதைப் போலவேதான் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“ஆஸ்திரேலியா அணி எப்படிப்பட்ட அணி என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் திட்டமிடும் விதம் எப்படி என்றும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இந்த தொடரை ஒரு பயிற்சி போட்டியாக எடுத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

மேலும் அவர்கள் உலகக் கோப்பை நுழைவதற்கு ஒரு சரியான மொமண்டத்தை அமைக்க பார்க்கிறார்கள். எனவே அவர்கள் அதற்கான பரிசோதனைகளை செய்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். இதன் மூலம் இந்திய நிலைமைகளில் யார் எப்படி செயல்படுகிறார்கள் என்று அவர்கள் பார்க்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எப்பொழுதும் சவாலான கிரிக்கெட்டை விளையாட கூடியவர்கள். அடுத்த முறை நான் அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்ய வரும் பொழுது அவர்கள் எனக்கு எதிராக சிறப்பான திட்டங்களோடு வருவார்கள்.

நான் அவர்களை ஒரு அணியாக எப்பொழுதும் சாதாரணமாக எடுத்துக் கொண்டதே கிடையாது. சில சமயங்களில் அவர்கள் காயப்படுத்தலாம். ஆனால் அவர்களுடன் விளையாடுவது எப்பொழுதும் அருமையான ஒன்று. அவர்கள் ஒரு அணியாக அதிகம் உந்துதல் பெற்றவர்கள் மற்றும் சுற்றியுள்ள சூழ்நிலைகளை உயர்த்தக்கூடியவர்கள்!” என்று கூறி இருக்கிறார்!