“டி20 உலக கோப்பைக்கு சமி சிராஜ் வேண்டாம்.. இவங்க மட்டும் போதும்” – தமிழக வீரர் அபினவ் முகுந்த் கருத்து

0
100
Mukund

இந்த ஆண்டின் மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பழைய முறைக்குத் திரும்பி தயாரிப்புகளை வேகப்படுத்தி இருக்கிறது.

கடந்த 14 மாதங்களாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய டி20 அணி உருவாக்கப்பட்டு, பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்தது.

- Advertisement -

இதன் முடிவில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய படை டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. விளையாடிய வீரர்களும் அப்படித்தான் நினைத்திருந்தார்கள்.

ஆனால் தற்போது பேட்டிங் யூனிட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பவுலிங் யூனிட்டில் முகமது சமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் கொண்டுவரப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. சிராஜ் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடினார். சமி காயத்தில் இருந்ததால் விளையாடவில்லை.

இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் கடந்த 14 மாதங்களாக இந்திய டி20 கிரிக்கெட் அணியை உருவாக்குவதில் வாய்ப்பு பெற்று இருந்த நான்கு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலை உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்திய பேட்டிங் யூனிட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது ருத்ராஜ் மற்றும் திலக் வர்மா, பவுலிங் யூனிட்டில் முகேஷ் குமார், ஆவேஸ் கான் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கும் இந்திய டி20 உலகக்கோப்பை அணிகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இதுகுறித்து தமிழக வீரர் அபினவ் முகுந்த் கூறும் பொழுது ” என்னைப் பொறுத்த வரையில் டி20 உலகக்கோப்பைக்கு சிராஜ் மற்றும் சமி இருவரும் தேவையில்லை. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் இரண்டும் வேறு வேறு ஆனது.

அதில் சிறப்பாக செயல்பட்டவர்கள் இதிலும் செயல்படுவார்கள் என்று சொல்ல முடியாது. அர்ஸ்தீப் சிங் சமீப ஆண்டுகளில் 44 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி விளையாடியிருக்கிறார். ஆனால் சமி மற்றும் சிராஜ் இந்த அளவில் கொஞ்சம் கூட விளையாடவில்லை.

மேலும் அவர் தனது பந்து வீச்சிலும் நிறைய மாற்றங்களை செய்து முன்னேற்றம் கண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் விளையாடி வரும் இந்த வீரர்கள் பங்கேற்பதுதான் சரியாக இருக்கும். எனவே சமி மற்றும் சிராஜ் பதிலாக அர்ஸ்தீப் மற்றும் முகேஷ் குமார் இருவரும் விளையாடுவதே சரியானது” என்று கூறியிருக்கிறார்.