“நாங்க கடைசியில தோக்கலை.. அந்த இடத்திலேயே தோத்துட்டோம்.. ஏமாற்றமா இருக்கு!” – ஆப்கான் கேப்டன் விரக்தி பேச்சு!

0
19360
Afghanistan

இன்று உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு நடந்த சம்பவத்தை அந்த அணியின் கிரிக்கெட் வரலாற்றில் எப்பொழுதுமே மறக்க மாட்டார்கள். அப்படி ஒரு ஆட்டத்தை மேக்ஸ்வெல் ஆடி இருக்கிறார்!

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து பந்துவீச்சில் திரும்பி வந்து ஆஸ்திரேலியாவின் முதல் ஏழு விக்கெட்டுகளை 91 ரன்களுக்கு வீழ்த்தியது.

- Advertisement -

ஆனால் இதற்கு மேல் ஆஸ்திரேலியாவின் ஒரு விக்கெட்டை கூட ஆப்கானிஸ்தான் அணியால் கைப்பற்ற முடியவில்லை. மேலும் ஆட்டத்தையும் வெல்ல முடியவில்லை.

அங்கிருந்து தனி ஒரு வீரராக நின்றது மட்டும் இல்லாமல், விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் 360 டிகிரியில் மைதானம் முழுவதும் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர்களின் மொத்த தன்னம்பிக்கையும் உடைத்தார் மேக்ஸ்வெல்.

இந்த போட்டியில் அவர் 128 பந்துகளை சந்தித்து அனாயசமாக 201 ரன்கள் குவித்தார். இதில் ஆப்கானிஸ்தானுக்கு பெரிய சோகம் என்னவென்றால், மேக்ஸ்வெல் கடைசியில் விளையாடக் கூடிய உடல் தகுதியிலும் இல்லை என்பதுதான். ஆனால் அப்படி இருந்தும் தந்தை சிக்ஸர்களுக்கு அலட்சியமாக அடித்தார். இந்தத் தோல்வி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தையும் பெரிய ஏமாற்றத்திற்கு தள்ளி இருக்கிறது.

- Advertisement -

போட்டி முடிவுக்கு பின் பேசிய ஆப்கான் கேப்டன் ஷாகிதி கூறும்பொழுது “மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டுதான் ஆனால் எங்களுக்கு நம்ப முடியாததாக இருந்தது. நாங்கள் போட்டியை நன்றாக தொடங்கினோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தார்கள். ஆனால் நாங்கள் கைவிட்ட கேட்ச் வாய்ப்புகள் எங்களை ஆட்டத்தில் தோற்கடித்து விட்டது.

நாங்கள் மேக்ஸ்வெல்லுக்கு ஒரு கேட்ச் விட்டோம். அவர் அந்த இடத்திலிருந்து தன்னிடம் இருக்கும் எல்லா ஷாட்களையும் விளையாட ஆரம்பித்து விட்டார். அதற்கு மேல் அவரை எங்களால் நிறுத்தவே முடியவில்லை. இதற்கான மொத்த பெருமையும் அவருக்கே சேரும்.

எங்கள் பந்துவீச்சாளர்கள் அவர்களால் முடிந்தவரை முயற்சி செய்து போராடினார்கள். ஆனாலும் மேக்ஸ்வெல் அதற்கு மேல் எங்களுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை.

நாங்கள் எங்கள் அணியை பற்றி பெருமைப்படும் அதே வேளையில் இன்று இரவு மிகவும் ஏமாற்றத்தில் இருக்கிறோம். இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இதுதான் கிரிக்கெட் இது ஆட்டத்தின் ஒரு பகுதி.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நாங்கள் வலிமையாக திரும்பி வர எல்லாம் செய்வோம். இப்ராஹிம் சதம் அடித்தது குறித்து பெருமை கொள்ள வேண்டும். அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையில் முதல் சதத்தை அடித்திருக்கிறார். அவர் குறித்து நானும் பெருமைப்படுகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!