“எங்களால இந்த 2 விஷயத்தால நல்லா விளையாட முடியல.. சரி பண்ணிடுவோம்!” – கேப்டன் ருதுராஜ் விளக்கம்!

0
588
Ruturaj

இன்று சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி நேபால் அணிக்கு எதிராக 202 ரன்கள் குவித்து அதேவேளையில் நேபாள் அணியை 179 ரன்கள் அடிக்க விட்டு 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் துவக்க வீரராக வந்த இளம் இடதுகை இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு மிக வலிமையான துவக்கத்தை ஏற்படுத்தித் தந்தார்.

- Advertisement -

அதேபோல் இறுதிக்கட்டத்தில் ஃபினிஷர் ஆக வந்த இளம் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என்று அதிரடியாக 37 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதன் காரணமாகவே இந்திய அணி 200 ரன்களை கடந்தது.

கடைசி ஓவரில் 25 ரன்கள் கிடைக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கும். மேலும் இது காலிறுதி போட்டி என்பதால் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கும்.

- Advertisement -

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வருமா பத்து பந்துகளை எதிர்கொண்டு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் கேப்டன் ருதுராஜ் மற்றும் ஜிதேஷ் ஷர்மா யாரும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. சிவம் துபேவும் திணறவே செய்தார்.

இதைவிட முக்கியமாக எதிரில் விளையாடிய நேபாள் அணி அனுபவத்தில் மிகவும் சிறிய அணி. அதே சமயத்தில் மைதானத்தில் பவுண்டரி எல்லையும் சிறிதாக இருக்கிறது. இத்தனை சாதகங்கள் இருந்தும் வலிமையான இந்திய அணி செயல்பட்ட விதம் சரியான ஒன்றாக இல்லை.

போட்டிக்கு பிறகு இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கூறுகையில் “இங்கு எங்களுக்காக வந்த ஆதரவாளர்களுக்கு பெரிய நன்றி. இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

ஆடுகளம் கொஞ்சம் சவாலாக இருந்தது. குறிப்பாக இந்த நிலைமை எங்களுக்கு பழக்கம் இல்லை. ஆனாலும் கூட எங்களுடைய முதல் போட்டிக்கு நாங்கள் ஓரளவுக்கு நிலைமைக்கு பழகி இருக்கிறோம் என்று நம்புகிறேன்.

இந்த அணியில் இருக்கக்கூடிய அனைவருமே கிரிக்கெட்டுக்காக இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தி உள்ள வீரர்கள். மேலும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். தற்போது வீரர்களின் பார்ம் மற்றும் உடல் தகுதி இரண்டையும் கருத்தில் கொண்டு வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -