“இந்த கேள்விக்குலாம் பதில் சொல்ல முடியாது”.. கடுப்பான ரோகித் சர்மா.. உலக கோப்பை அணி அறிவிப்பில் நடந்த வார்த்தை மோதல்!

0
810
Rohit

இன்று இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று மதியம் அறிவித்திருக்கிறது!

இன்று இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நீடிக்கிறார். மேலும் காயத்தில் இருந்து திரும்பிய கேஎல் ராகுல் இணைக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்றாலும் சுழற் பந்துவீச்சாளர் சாகலுக்கு அணியில் இடம் தரப்படவில்லை. மேலும் ஆப் ஸ்பின்னர் தேர்வுக்கு அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை கணக்கில் எடுக்கவில்லை.

இந்த அணியில் பிரதான சிலர் பந்துவீச்சாளராக குல்தீப் தொடர்கிறார். அதே சமயத்தில் வேகப்பந்துவீச்சாளர்களாக எந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளரும் இல்லை. இவையெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ள உலகக் கோப்பை இந்திய அணியில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த அணி அறிவிப்பு ஆசியக் கோப்பை அணி அறிவிப்பு போலவே தேர்வுக்குழு தலைவர் மற்றும் அணித்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு வெளியிட்டார்கள். அப்பொழுது பத்திரிகையாளர் சந்திப்பில் உலகக்கோப்பை அணி பற்றிய வெளிமக்கள் கருத்து குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்க அவர் மிகவும் கோபம் அடைந்து விட்டார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா
” இதற்கு நான் பலமுறை பதில் சொல்லிவிட்டேன். வெளியில் இருந்து என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. நாங்கள் அதை பொருட்படுத்துவது கிடையாது. எங்களுடைய வேலை வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பார்த்து விளையாடுவது அல்ல. நாங்கள் தொழில்முறை வீரர்கள். இவற்றையெல்லாம் கடந்து வந்தவர்கள். அதனால் இது எல்லாம் பெரிய வித்தியாசத்தை உண்டாக்கும் என்று நினைக்க வேண்டாம்.

இந்த அணித் தேர்வில் எந்த ஆச்சரியமும் இல்லை. 15 பேர் மட்டுமே இடம்பெற முடியும். இதனால் எங்கள் வீரர்கள் சிலர் ஏமாற்றம் அடைவார்கள். நான் இதை கடந்து விட்டேன். இது எப்படி உணரப்படும் என்று எனக்குத் தெரியும். எங்களிடம் நல்ல ஆல்ரவுண்ட் விருப்பங்கள் உள்ளன. இது எங்களுடைய சிறந்த 15 பேர் கொணட அணியாகும். நான் இன்னும் திட்டங்கள் பற்றி எதுவும் யோசிக்கவில்லை.

யார் ஃபார்மில் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்று பார்க்க வேண்டும். இதில் சிறந்த காம்பினேஷன் எதுவென்று பார்க்க வேண்டும். இப்படி நடக்கும்போது நாம் விளையாடும் அணியில் சிலரை தவற விடுவோம். இது எப்பொழுதும் நடக்க கூடியது. அணியின் நன்மைக்காக இப்படி கடினமான முடிவுகளை சந்தித்தாக வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணி :

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சர்துல் தாக்கூர், ஜஸ்ட்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.