நான் பதட்டம் அடையலாம்; ஆனால் அவர் அப்படியல்ல – ரோகித் சர்மா புகழ்ச்சி!

0
660
Rohit sharma

கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைந்த 20 ஓவர் போட்டியாக இருந்தாலும் ஒரு நல்ல தரமான ஆடுகளத்தில் தரமான இரண்டு அணிகள் மோதிக் கொண்டால் அந்தப் போட்டி பார்ப்பதற்கு எப்படி போன்று இருக்கும் என்பதற்கு உதாரணமாக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி காட்டியது!

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சு படை புத்திசாலித்தனமான தாக்குதலை பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் மீது தொடுத்தது. புவனேஸ்வர் குமார் பந்தில் ஸ்விங் செய்ய முடியாது போனாலும், சிறப்பான லைன் அண்ட் லென்ஸ் மூலம் அட்டகாசப்படுத்தினார். ஒரு சிறப்பான பவுன்சர் மூலம் உலகின் நம்பர் ஒன் t20 பேட்ஸ்மேனான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபரை வீழ்த்தினார். அடுத்து இறுதியில் பந்துவீச வந்து மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கார்த்திக் பாண்டியா தன் பங்கிற்கு சிறந்த பவுன்சர்கள் மூலம் 3 விக்கெட்டுகளை காலி செய்தார். இதனால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் நூத்தி நாற்பத்தி ஏழு ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

- Advertisement -

இதையடுத்து களம் கண்ட அனுபவம் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் அணியின் அனுபவமற்ற இளம் வேகப்பந்து வீச்சு படை பரிசோதித்தது. ரியல் ராகுல் தான் சந்தித்த முதல் பந்திலேயே 19 வயதான நதிம் ஷா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இந்திய அணியை நெருக்கடிக்குள் தள்ளினார்கள்.

ஆனால் இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹ்ர்டிக் பாண்டியா இருவரும் தங்களது அனுபவத்தை காட்டியதோடு, ஆட்டத்தின் எந்த ஒரு இடத்திலும் ஒரு சிறு துளி பதட்டத்தை கூட வெளிப்படுத்தவில்லை. 19வது ஓவரில் சிறப்பான வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு அற்புதமாக 3 பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ததோடு, கடைசி ஓவரில் அட்டகாசமான ஒரு சிக்சர் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெறவும் வைத்தார் ஹர்திக் பாண்டியா.

காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா தற்போது வேறொரு மாதிரி மிகவும் பக்குவப்பட்டு நிதானமாக எதையும் அணுகி அதை வெற்றிகரமாக மாற்றுகிறார். தற்போது இவரது இந்த மாற்றம் பலராலும் வியந்து பாராட்டப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புதிய அணியான குஜராத் அணிக்கு கேப்டனாக தலைமை ஏற்றதோடு பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் முன்னே நின்று ஒரு வீரராகவும் சிறப்பாகச் செயல்பட்டு, இறுதிப்போட்டி வரை அதைத் தொடர்ந்து கோப்பையையும் வென்று ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

ஆட்டத்திற்கு பிறகு ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய ரோகித் சர்மா மிகவும் வியந்து புகழ்ந்து கூறினார். அவர் கூறும் பொழுது ” அவர் பேட்டிங் தரம் நாம் அறிந்த ஒன்றே. அவர் காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறார். மேலும் அவர் எதை செய்ய விரும்புகிறாரோ அதை மிகவும் நம்பிக்கையோடு செய்கிறார். பேட்டிங் செய்வதாக இருந்தாலும் சரி இல்லை பந்து வீசுவதாக இருந்தாலும் சரி. இன்று அவர் வேகமாக பந்து வீசியதை நாம் பார்த்தோம். மேலும் அவர் சிறப்பாக ஷார்ட் பந்துகளை வீசினார். அவர் விளையாட்டை புரிந்து கொள்வதாகவே இருந்தது. இப்போது அவர் இதை மிக நன்றாக செய்கிறார். ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அதிக நெருக்கடி மிகுந்த நேரத்தில், நீங்கள் பீதி அடையலாம் ஆனால் அவரது வெளிக்காட்டவேவில்லை ” என்று வியந்து புகழ்ந்து கூறியிருக்கிறார்!