“டி20 உலக கோப்பைக்குத்தான் வேலை செய்றோம்.. ஆனா பழைய மாதிரி இல்ல” – ரோகித் சர்மா பேச்சு!

0
145
Rohit

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இந்திய அணிக்கு எதிராக இரு நாடுகள் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரில் ஏற்கனவே பஞ்சாப் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இன்று இரண்டாவது போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு டாசை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

மேலும் இந்திய அணியில் இந்த போட்டியில் முக்கியமான இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா இருவரும் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்குகிறார்கள். மற்றபடி இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்க ஜெய்ஸ்வால் கில் இருவரும் தங்கள் இடத்தை இழப்பார்கள் என்று கருதப்பட்டது. மேலும் இதேபோல் டி20 உலக கோப்பையிலும் தொடரும் என்று நினைத்திருக்கையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வித்தியாசமாக யோசித்து இருக்கிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான அணியில் ஒரு மாற்றமாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்த ரஹமத்,ஷா நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் ஒரு கூடுதல் பந்துவீச்சாளராக சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது சேர்க்கப்பட்டிருக்கிறார்.

டாஸ் வென்ற பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம் இதற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் கிடையாது. இந்த மைதானத்தில் பௌண்டரி எல்லைகள் சிறியது. எனவே இங்கு சேஸ் செய்வது நல்லது. நாங்கள் முன்பு பேசிக் கொண்டிருந்த விஷயங்களை முதல் ஆட்டத்தில் செய்ய முடிந்தது.

நாங்கள் எங்கள் வீரர்களுக்கு குறிப்பிட்ட ரோல் கொடுத்து அதை செய்யச் சொன்னோம். அதை அவர்கள் சிறப்பாக செய்தார்கள். மேலும் அவர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும். அதை நாங்கள் எப்பொழுதும் உறுதி செய்கிறோம்.

நாங்கள் இப்பொழுது முழுக்க டி20 உலக கோப்பையை மனதில் வைத்துதான் எல்லா வேலைகளையும் செய்வோம். அதே சமயத்தில் போட்டிகளை வெல்ல வேண்டியதும் முக்கியம் என்று நாங்கள் அறிவோம். கில் மற்றும் திலக் இருவரும் நீக்கப்பட்டு அவர்கள் இடத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்!