கேஎல் ராகுல் மாதிரி கேப்டன் கிடைத்தது, எங்களுக்கு அதிஷ்டம் – கௌதம் கம்பீர் பேட்டி!

0
92

கே எல் ராகுல் போன்ற வீரர் எங்களுக்கு கேப்டன் ஆக வந்தது அதிர்ஷ்டம் என சமீபத்திய விழாவில் கௌதம் கம்பீர் பெருமிதமாக பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன் நேரடியாக மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் துவங்கவிருக்கிறது. பல்வேறு அணிகள் இதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிட்டனர். இந்திய அணியில் இல்லாத வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு சென்று பயிற்சியிலும் இறங்கிவிட்டனர்.

- Advertisement -

இன்று, லக்னோவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார். இந்த நிகழ்வில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் கௌதம் கம்பீர், கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கௌதம் கம்பீர் பேசியபோது கேப்டன் கே எல் ராகுல் பற்றி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது

“லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக கிடைத்தது அதிர்ஷ்டம். அவரது பேட்டிங் அணுகுமுறை மற்றும் நேர்த்தியான கேப்டன்ஷிப் பொறுப்பு எனக்கும் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நான் கேப்டனாக இருந்த போது அவ்வாறு எனக்கு இருந்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என நினைத்திருக்கிறேன்.

கடந்த சீசனில் நாங்கள் செயல்பட்ட விதம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. மிதல் சீசனை விட இம்முறை இன்னும் எங்களது இலக்கை மேலே வைத்து கடுமையாக செயல்படுவோம். இந்த புதிய ஜெர்சியை பார்க்கும் பொழுது உத்வேகமாக இருக்கிறது. அத்துடன் ஜெர்சியைபோல அணுகுமுறையும் புதிய உத்வேகத்துடன் இருக்கும்.” என்றார்.

- Advertisement -

இந்த விழாவில் க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா உள்ளிட்ட சில லக்னோ ஜெயின்ஸ் வீரர்களும் பங்கேற்றனர். கேஎல் ராகுலின் சமீபத்திய ஃபார்ம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. அதை ஐபிஎல் போட்டிகளில் சரி செய்து மீண்டும் இந்திய அணிக்குள் சிறந்த பார்மிற்கு திரும்புவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.