“ரோகித்தும் இந்திய அணியும் மாற நாங்கதான் காரணம்!” – இங்கிலாந்து மோர்கன் முக்கிய தகவல்!

0
8081
Morgan

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்து இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்தது.

இதற்கு அடுத்து ஒரு மாதம் கழித்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது.

- Advertisement -

இதில் டெஸ்ட் தொடரை அபாரமாக வென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளை வென்று ஒரு போட்டியை தோற்றது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை அருகில் வைத்துக்கொண்டு இந்த தோல்வி இந்திய அணி மீது பெரிய விமர்சனத்தை உருவாக்கியது.

மேலும் உலகக் கோப்பை அப்பொழுது வேகமாக நெருங்கிக் கொண்டிருக்க, இந்திய அணியின் முக்கிய வீரர்களான பும்ரா, ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல்.ராகுல், மேலும் மாற்று வீரராக பார்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா ஆகியோர் காயத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் தான் எல்லா வீரர்களும் காயத்தில் இருந்து திரும்பி இந்திய அணியில் ஒன்றிணைந்து ஆசியக் கோப்பைகளும் தற்போது உலகக்கோப்பைகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

நாளை உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணி குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் சில முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “பத்து போட்டிகளிலும் தோற்கடிக்கப்படாத இந்திய அணி இறுதிப்போட்டியில் சற்று முன்னிலையில் இருக்கிறது. விராட் கோலி அதிக ரன் அடித்தவராகவும், முகமது சமி அதிக விக்கெட் வீழ்த்தியவராகவும் இருக்கிறார். அணியின் செயல்பாடு நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்விதான், ரோகித் சர்மா அணியின் பேட்டிங் அணுகுமுறையை மாற்றி அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதற்குப் பிறகு அவர் அணியின் பேட்டிங் அணுகுமுறையை மாற்றினார்.

இந்திய அணி வெறும் ரன்களை குவிப்பதில் திருப்தி அடையாமல், இப்போது இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் எதிரணிகளை அச்சுறுத்தும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாக வைத்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!