அக்சரை வைத்து பக்கா பிளான் போட்டிருக்கும் இந்தியா – சவுத் ஆப்பிரிக்காவை வீழ்த்த காத்திருக்கும் ரோகித் படை!

0
657

சவுத் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு மாறுபட்ட திட்டத்தை வகுத்திருப்பதாக அக்சர் பட்டேல் தெரிவித்திருக்கிறார்.

நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணி தனது மூன்றாவது சூப்பர் 12 போட்டியை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது

- Advertisement -

குரூப் இரண்டில் புள்ளிபட்டியலில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு எளிதாகிவிடும்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் வங்கதேச அணியை பந்தாடிவிட்டு இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் விளையாட வருகின்றனர். அவர்களை சமாளிப்பதற்கு இந்தியா புதிய திட்டங்களை வகுத்திருப்பதாக தெரிகிறது.

இதனை தனது சமீபத்திய பேட்டியில் அக்ஸர் பட்டேல் கூறியுள்ளார். அவர் கூறுகையில், “தென் ஆப்பிரிக்க அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தால், நம்மிடம் டாப் பார்மில் இருக்கும் விராட் கோலி இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவதற்கு வேறொரு திட்டங்களும் இருக்கின்றன.

- Advertisement -

நார்க்கியா மற்றும் ரபாடா ஆகியோரின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் எதிர்கொள்வதற்கு தொடர்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆகையால் நான் ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னர் களம் இறக்கப்படலாம் என்று இந்திய அணி நிர்வாகம் என்னிடம் முன்னரே தெரிவித்து விட்டது.

பேட்டிங்கில் நன்றாக செயல்படுவதற்கு அதிதீவிரமாக பயிற்சிகளை செய்து வருகிறேன். பந்துவீச்சை விட பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துகிறேன். அநேகமாக மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை சமாளிப்பதற்கு என்னை பேட்டிங் வரிசையில் முன்னே களம் இறக்கப்படலாம்.” என்று தெரிவித்தார்.