“ஆப்கானிஸ்தான் மேட்ச் மாதிரிதான் பாகிஸ்தானையும் பார்க்க போறோம்.. எந்த மாற்றமும் கிடையாது!” – ரோகித் சர்மா அதிரடி பேட்டி!

0
938
Rohit

இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியை ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது போட்டியில் இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறது!

நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தாக்குதல் பாணியிலேயே விளையாடி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பந்துவீச்சில் அதிரடியாக இருந்த இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங்கில் அதிரடியாக இருந்தது.

- Advertisement -

துவக்கத்தில் அணிக்கு அதிரடியான அடிப்படையை ஏற்படுத்தி தருவதே தன்னுடைய நோக்கம் என்று ரோஹித் சர்மா மிக தெளிவாக கூறி வருகிறார். எந்த இடத்திலும் பொறுமையைக் காட்டி விளையாடுவது இல்லை என்று அவர் முடிவு செய்திருக்கிறார். மேலும் மொத்த அணியும் அப்படி எந்தவித பயமில்லாமல் விளையாடுவதையே அணுகுமுறையாக கொண்டிருக்கிறது.

இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அப்படியான அதிரடி ஆட்டத்தையே மேற்கொண்டார். 63 பந்துகளில் சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் மிக வேகமாக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

மேலும் நடந்து முடிந்த போட்டியின் மூலம் 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்து, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்தவராகவும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராகவும், ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவராகவும் மாறி இருக்கிறார்.

- Advertisement -

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
“எங்களுக்கு இது ஒரு நல்ல வெற்றி. தொடக்கத்தில் வேகத்தை பெறுவது முக்கியம். நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். அழுத்தத்தை நன்றாக உள்வாங்க வேண்டும். நாங்கள் அதை சரியாக செய்தோம். இப்போதைக்கு நடந்ததை ஒருபுறம் நகர்த்தி வைத்துவிட்டு அடுத்து நடப்பதை பார்க்க வேண்டும்.

வெவ்வேறு திறன்களையும் பண்புகளையும் கொண்ட வீரர்களை பெற்றிருக்கிறோம். இது அணிக்கு நல்லது. சுதந்திரமாகவும் பயம் இல்லாமலும் விளையாடும் வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். உங்களிடம் இப்படியான வீரர்கள் இருக்கும்பொழுது அவர்கள் வேலையை அவர்களை பார்த்துக் கொள்வார்கள்.

உலகக் கோப்பைகளில் நீங்கள் வெவ்வேறு ஆட்டங்களில் வெவ்வேறு பாணிகளில் பதில் அளிக்க வேண்டும். இன்றைய போட்டியை என்ன செய்தோமோ அதே போல் பாகிஸ்தான் போட்டியை பார்க்க நினைக்கிறோம். ஆடுகளத்திற்கு என்ன தேவையோ அதைப் பொறுத்து எங்களுடைய அணி அமையும்!” என்று கூறியிருக்கிறார்!