“ரோகித் சர்மா முழு ஐபிஎல் சீசன் ஆடமாட்டார்; நடுவுல ரெஸ்ட் குடுக்கலாம்னு இருக்கோம்.. ஏன்னா?” – மும்பை இந்தியன்ஸ் கோச் பேட்டி!

0
431

ரோஹித் சர்மாவிற்கு ஐபிஎல் தொடருக்கு நடுவில் சில போட்டிகள் ஓய்வு கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என பேசியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகிற மார்ச் 3ஆம் தேதி அகமதாபாத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பெற்று ஐபிலை விட்டு மோசமாக வெளியேறியது.

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதனால் மும்பை அணி சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு வந்திருப்பதால் ஆறுதலாகவும் இருக்கிறது. விரைவில் பும்ராவிற்கு மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல்கள் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வந்திருக்கிறது.

ஐபிஎல் துவங்க இன்னும் ஒரிரு நாட்களே இருக்கும் நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினர்.

- Advertisement -

இந்த வருடம் 50-ஓவர் உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக விளையாடுகிறார். இந்திய அணிக்கும் இந்த வருடம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது.

ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதால் அவருக்கு கூடுதல் பணிச்சுமை மற்றும் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எப்படி ஈடுசெய்யும் என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த பயிற்சியாளர் மார்க் பவுச்சர்,

“ரோகித் சர்மாவை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்கலாம் என நாங்கள் திட்டமிடவில்லை. தொடரின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில போட்டிகளில் அவரை வெளியில் அமர்த்தலாம் என திட்டமிட்டு இருக்கிறோம். தேவைப்பட்டால் அதற்கும் அதிகமான போட்டிகளில் ஓய்வு கொடுப்போம்.

சர்வதேச போட்டிகளில் அவரது முக்கியத்துவம் எங்களுக்கும் தெரியும். ஆகையால் அவரது பணிச்சுமையை முழு கவனத்துடன் கண்காணித்து வருகிறோம். முழு உடல்தகுதியுடன் இருக்கிறார். கூடுதல் நேரம் உடற்பயிற்சியும் செய்கிறார். அணி நிர்வாகத்திற்கும் ரோகித் சர்மாவிற்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது.” என கூறினார்.