நாங்கள் சென்னை பாய்ஸ் – கரிபியனில் டூப்ளெசிஸ் மற்றும் ப்ராவோ இணைந்து பாடிய பாடல்

0
127
Faf du Plessis and Dwayne Bravo

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் தற்பொழுது கரீபியன் பிரீமியர் லீக் என்ற தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஐபிஎல் பாணியில் நடக்கும் இந்தத் தொடரில் கெயில், பொல்லார்ட், ப்ராவோ, டூப்ளெசிஸ் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். மிகவும் விறுவிறுப்பான ஆட்டங்களை கொண்டுள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் செயின்ட் லூசியா அணியும் பேட்ரியாட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. செயின்ட் லூசியா அணியின் தலைவராக டூப்ளெசிஸ் உள்ளார். பேட்ரியாட்ஸ் அணியின் தலைவராக பிராவோவும் உள்ளனர். இல்லை இருவருமே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். மிக நீண்ட காலமாக சென்னை அணிக்கு இந்த இருவரும் பங்களித்து வருகிறார்கள். இருவருமே 2011ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். நீ கொண்டிருந்த இரண்டு வருடங்கள் மட்டும் தான் இவர்கள் சென்னை அணிக்கு விளையாடவில்லை.

- Advertisement -

ஆக இந்த இருவருக்கும் நீண்ட காலமாக மிக நெருக்கமான நட்பு உள்ளது. அதை நிரூபிக்கும் வண்ணமாகவே நேற்றைய ஆட்டத்தில் டாஸ் நிகழ்வின் போது இருவரும் ஒரு காரியம் செய்தனர். டாஸ் போட்ட பின்பு, “நாங்கள் சென்னை வீரர்கள். எங்கு சென்றாலும் இந்த மகிழ்ச்சிகரமான ஒலியை எழுப்புவோம்” என்ற பொருள் கொள்ளும் படியான ஒரு ஆங்கிலப் பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள்.

சென்னை அணியின் ட்விட்டர் பக்கமும் இந்த நிகழ்வை பகிர்ந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் துவக்க வீரரான டூப்ளெசிஸ் அற்புதமாக விளையாடி சதம் கடந்தார். கடந்த சில ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் தற்போது சதம் கடந்து இருப்பது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் மற்றொரு சென்னை வீரரான டுவைன் பிராவோ பந்து வீசும்போது 3.2 ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். காயம் காரணமாக பேட்டிங் ஆடவும் வரவில்லை. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பிராவோவின் காயம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.