“நிஜமா ரன் சேர்த்து குடுத்துட்டோம்.. ஜெய்ஸ்வால்தான் மூச்சு விட வச்சிருக்கார்” – அஷ்வின் ஓபன் ஸ்பீச்

0
715
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 88 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அந்த அணியை கேப்டன் ஸ்டோக்ஸ் காப்பாற்றினார். இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

மேற்கொண்டு தொடர்ந்து இருபத்தி மூன்று ஓவர்கள் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா விக்கெட்டை 24 ரன்களுக்கு இழந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 119 ரன்கள் எடுத்திருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் இன்னிங்ஸில் இளம் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து, 70 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.

போட்டியின் முதல் நாள் முடிவுக்கு பின் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் “முதல் செஷன் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. ஈரப்பதம் காரணமாக கொஞ்சம் ஆடுகளத்தில் வேகம் இருந்தது. ஈரப்பதம் குறைய பந்து நன்றாக சுழன்று திரும்பியது. மேலும் வேகம் குறைந்த காரணத்தினால் ஸ்லிப் பீல்டர்களுக்கு பந்து கேரி ஆகவில்லை. இந்த ஆடுகளத்தில் ரன் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் வேகத்தை மாற்றி மாற்றி வீச வேண்டும்.

- Advertisement -

இந்த மைதானத்தில் 240 ரன்கள் என்பது நல்ல ரன்கள்தான். நாங்கள் கொஞ்சம் ரன்கள் சேர்த்துக் கொடுத்து விட்டதாகவே நினைக்கிறோம். ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா கொடுத்த துவக்கம் எங்களைக் கொஞ்சம் சுவாசிக்க வைத்திருக்கிறது. காலை யாராவது ஒருவர் போய் சதம் அடித்தால், நாங்கள் இந்த போட்டியில் முன்னணியில் இருப்போம்.

ஜெய்ஸ்வால் இந்த வகையில் விளையாடுவதுதான் விளையாட்டின் அழகு. யாரோ ஒருவர் இப்படி சிஸ்டத்தை உடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவருக்கு நல்ல ஒரு ஐபிஎல் தொடர் இருந்தது. அவருக்கு முதல் தர கிரிக்கெட்டிலும் நல்ல புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

இதையும் படிங்க : INDA vs ENGL.. 18 பவுண்டரி.. 5 சிக்ஸர்.. சர்பராஸ் கான் அதிரடி.. இந்தியா ஏ அபாரம்.. நெருக்கடியில் இங்கிலாந்து லயன்ஸ்

ஜெய்ஸ்வால் உண்மையில் ஒரு கால் கூட தவறாக வைக்கவில்லை. அவர் டெஸ்டில் வந்ததும் நீரில் பழகிய மீன் போல சென்றார். அவரது அச்சமற்ற பேட்டிங் அணுகுமுறை சில நல்ல ஷாட்களை விளையாட வைக்கிறது. நான் அதை மிகவும் ரசிக்கிறேன்.

அவர் விளையாடும் போது சில முறை பார்க்கையில் ரிஷப் பண்ட் போலவே இருக்கிறது. இவர்கள் இருவருமே இடதுகை சுழற் பந்துவீச்சாளர்களை ஒரே மாதிரி விளையாடுகிறார்கள். ஜெய்ஸ்வாலுக்கு நிறைய ஷாட்கள் இருக்கிறது. அவருடைய அச்சமற்ற கிரிக்கெட் அணுகுமுறை இப்பொழுது நன்றாக வேலை செய்கிறது” என்று கூறி இருக்கிறார்.