உ.கோ பாகிஸ்தான் இறுதி அணி அறிவிப்பு.. நசீம் ஷா இல்லை.. நட்சத்திர ஆல்ரவுண்டர் அழைப்பு.. மேலும் பல அதிரடி மாற்றங்கள்!

0
3615
Pakistan

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதியாக அணியை அறிவிக்கும் நாளாக 28ஆம் தேதி இருக்கிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அணியை தர வேண்டும், பிறகு செப்டம்பர் 28ஆம் தேதி வரையில் அதில் தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று ஐசிசி விதிமுறை வகுத்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவை எடுத்துக் கொண்டால் 27ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு, கடைசி நாளான 28ஆம் தேதி உலகக் கோப்பை இந்திய அணியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி இன்று தனது 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை வெளியிட்டு இருக்கிறது. இந்த அணியில் சில ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் வந்திருக்கின்றன.

நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு வர முடியாததை விட, அந்த அணி பெற்ற தோல்விகள் எப்படி இருந்தன? என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பலத்த சலசலப்புகளை உண்டாக்கி இருந்தது.

- Advertisement -

பாகிஸ்தான் இந்தியாவுடன் 228 ரன்கள் என்கின்ற வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதே சமயத்தில் வலிமைக்குன்றி இருந்த இலங்கை அணியை வீழ்த்த முடியாமல் வெளியேறியது. இதெல்லாம் பாகிஸ்தான் அணி நிர்வாகம் மீதும் கேப்டன் பாபர் அசாம் மீதும் பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.

இந்த நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக பாபர் அசாம் தொடர்கிறார். காயம் அடைந்த நட்சத்திர இளம் வேகபந்துவீச்சாளர் நசிம் ஷா உலகக் கோப்பை தொடரை தவறவிடுகிறார்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹசன் அலி சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் ஒரு கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக உசாமா மிர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மேலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஃபக்கிம் அஷ்ரப் நீக்கப்பட்டு இருக்கிறார். இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவுத் ஷகீல் அணியில் தொடர்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் கேப்டன், ஃபகார் ஜமான், சவுத் ஷகீல், உசாமா மிர்
இமாம்- உல்- ஹக், இப்திகார் அகமது,
ஷஹீன் ஷா அப்ரிடி, அப்துல்லா ஷபிக்,
ஆகா சல்மான், ஹரிஸ் ரவுப், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது ரிஸ்வான், ஷதாப் கான் மற்றும் ஹசன் அலி.