38 வயதிலும் கில்லி மாதிரி கீப்பிங்… இதுக்கு தான்யா நீ டீம்ல இருக்கன்னு பாராட்டிய ஹர்திக் பாண்டியா!

0
1313

குஜராத் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது எங்கேயோ வீசிய பந்தை, பாய்ந்து பிடித்து பவுண்டரியை தடுத்துள்ளார் விருதிமான் சஹா. இவர் கீப்பிங் செய்த விதத்தை ஹர்திக் பாண்டியா உட்பட மொத்த அணியினரும் பாராட்டிய வீடியோவை கீழே காணலாம்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 118 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

- Advertisement -

119 ரன்கள் எனும் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் அபாரமான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். சுப்மன் கில், சகல் பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து உள்ளே வந்த ஹர்திக் பாண்டியா மூன்று பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் உட்பட 15 பந்துகளில் 39 ரன்கள் விளாசி குஜராத் அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். 13.5 ஓவர்களில் 119 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் விருதிமான் சஹா கீப்பிங் செய்த விதம் பலரையும் பாராட்ட வைத்துள்ளது. குறிப்பாக போட்டியின் 14ஆவது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது வீசினார். பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹேட்மயருக்கு இடது பக்கம் மிகவும் வெளியே வீசினார்.

- Advertisement -

கீப்பர் எட்ட முடியாத தூரத்திற்கு சென்ற அந்த பந்தை பாய்ந்து பிடித்து அசாத்தியமாக தடுத்திருக்கிறார் விருதிமான் சஹா. இதை பார்த்தவுடன் ஹார்திக் பாண்டியா ஓடிவந்து பாராட்டினார். மற்ற வீரர்களும் வெகுவாக பாராட்டினர். சஹா அசாத்தியமாக கீப்பிங் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.