மெகா காமெடி : பங்களாதேஷ் செய்த குளறுபடியால் 1 பந்தில் 7 ரன்கள் சேர்த்த வில் யங் – வீடியோ இணைப்பு

0
2940
Will Young 7 Runs in 1 Ball vs Ban

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக வரலாற்று வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியை முதல் முறையாக வீழ்த்திய போட்டி அது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதி மற்றும் கடைசி போட்டியான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இன்றைய முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 90 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 349 ரன்கள் குவித்துள்ளது

நியூசிலாந்து அணியில் இன்று அதிக பட்சமாக ஓபனிங் வீரர் டாம் லதாம் 278 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் 186* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். அவருடன் இணைந்து ஓபனிங் விளையாடிய வில் யங் 54 ரன்கள் எடுத்து சோரிஃபுல் இஸ்லாம் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். தற்பொழுது களத்தில் லதாமுடன் இணைந்து டேவிட் காண்வே 99* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணி செய்த குளறுபடியால் ஒரு பந்தில் 7 ரன்கள்

ஆட்டத்தின் 26ஆவது ஓவரை எபாடத் ஹுசைன் வீசினார். அந்த ஓவரில் முதல் ஐந்து பந்தங்களையும் பிடித்த வில் யங் எந்தவித ரன்னும் அடிக்கவில்லை. அந்த ஓவரின் கடைசி பந்தை வீசுவதற்கு முன்பாக நியூசிலாந்து அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஓபனிங் வீரர் வில் யங் 26 ரன்கள் குவித்து இருந்தார்.

அந்த ஓவரின் கடைசி பந்தை பிடித்த வில் யங் தவறான ஷாட் அடித்து அவுட் ஆக பார்த்தார். அவருக்கு ஆஃப் சைடு பக்கமாக வந்த பந்தை தேவையில்லாமல் தனது பேட்டில் வில் யங் வாங்கிய காரணத்தினால், பந்து நேராக ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டாவது ஸ்லிப் வீரருக்கு சென்றது.
ஆனால் தனது கைக்கு வந்த கேட்சை பங்களாதேஷ் வீரர் தவற விட்டார்.

கேட்சை அவர் தவற விட்டது மட்டுமல்லாமல் அவரது கையில் பட்ட பந்து நேராக போன்று பவுண்டரி திசை பக்கம் சென்றது. பின்னர் வேறு ஒரு வீரர் அந்த பந்தை எடுத்து விக்கெட் கீப்பருக்கு வீசும் நேர இடைவெளியில் வில் யங் மற்றும் லதாம் இருவரும் இணைந்து 3 ரன்கள் ஓடினர்.

பின்னர் அந்த பந்தை எடுத்த விக்கெட் கீப்பர் எதிர்முனையில் ஓடிக்கொண்டிருந்த வில் யங்கை அவுட் ஆக்கும் முயற்சியில் பந்தை வேகமாக ஸ்டம்புக்கு எறிந்தார். ஸ்டம்ப்பில் படாமல் தப்பித்துக் கொண்ட அந்த பந்து இந்த முறை எதிர்ப்பக்கமாக இருந்த பவுண்டரி திசையில் வேகமாக சென்றது. அந்த ஓவரை வீசிய எபாடத் ஹுசைன் வேகமாக ஓடி வந்த பந்தை பிடிக்க முயற்சி செய்த போதிலும் அந்த பந்து பவுண்டரி லைனை தொட்டது.

இதன் காரணமாக 3 + 4 என மொத்தமாக அந்த பந்தில் 7 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு பரிசாக சென்றது. ஒரே பந்தில் 7 ரன்களை வில் யங் குவித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.