தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ; விரக்தியில் நின்ற விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
483
Virat Kohli golden duck vs SRH

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில், இன்று டபுள் ஹெட்டர் நாள். டபுள் ஹெட்டரின் இரண்டாவது ஆட்டத்தில், தொடரின் 36வது ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலன்ஞர்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் தற்போது மோதி வருகின்றன.

புள்ளி பட்டியலில் பத்துப் புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி கடந்த ஆட்ட அணியோடே தொடர்ந்தது. அதேபோல் எட்டுப் புள்ளிகளோடு ஐந்தாமிடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் பழைய அணியோடே களத்தில் குதித்தது.

- Advertisement -

தொடர்ச்சியாக ஏழாவது முறையாக டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணிக்குத் துவக்கம் தருவதற்காக கேப்டன் பாஃப்பும், அனுஜ் ராவத்தும் களம் புகுந்தனர்.

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீச பாஃப் அட்டகாசமா ஒரு பவுண்டரி அடிக்க, இந்த நாளும் பாஃப்பின் நாளாக தோன்றியது. ஆனால் அடுத்த ஓவருக்கு வந்த யான்சென் மொத்தக் கதையையும் மாற்றி எழுதிவிட்டார். கேப்டன் பாஃப்பை கிளீன் போல்டாக்கி வெளியேற்றி, விராட்டை வரவைத்து எட்ஜ் எடுக்க வைத்து ஸ்லிப்பில் முதல் பந்திலேயே தூக்கினார். இத்தொடர் முழுவதும் பேட்டிங்கில் தள்ளாடி வரும் விராட், லக்னோ அணியுடனான கடந்த ஆட்டத்திலும் சமீரா வீசிய முதல் பந்திலேயே அவுட்டாகி இருந்தார். இது தொடர்ச்சியாக இரண்டாம் முறை. அதுமட்டுமே அல்லாமல் ஒரு ஐ.பி.எல் சீசனில் விராட் இரண்டு டக் ஆவதும் இதுவே முதல் முறை!