2022 ஐபிஎலில் 3வது முறை டக் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ள விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
103
Virat Kohli golden duck vs SRH

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் டபுள் ஹெட்டர் நாளான இன்று முதல் போட்டியில் கேன் வில்லியசம்னின் ஹைதராபாத் அணியும், பாஃப் டூ பிளிஸிசின் பெங்களூர் அணியும், மும்பையின் வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. இந்தப் போட்டி இந்த ஐ.பி.எல் தொடரின் 54வது போட்டியாகும்.

ஹைதராபாத் அணி தான் விளையாடிய பத்துப் போட்டிகளில், ஐந்து போட்டிகளில் வென்று, பத்துப் புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. பெங்களூர் அணி தான் விளையாடிய பதினொரு போட்டிகளில் ஆறு போட்டிகளில் வென்று, பனிரென்டு புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. ப்ளேஆப்ஸ் வாய்ப்புக்கு இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு ஹைதராபாத் அணியில் பாரூக் என்ற புது வீரர் அணிக்குள் வந்திருக்கிறார். பெங்களூர் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் பாஃப் பேட்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் பேட்டிங்கை துவங்க வந்த விராட் ஸ்ட்ரைக் எடுக்க, சுழற்பந்து வீச்சாளர் சுஜீத் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே, கேன் வில்லியசம்னிடம் கேட்ச் கொடுத்து விராட்கோலி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இந்த ஐ.பி.எல் தொடரில் இது விராட்கோலிக்கு மூன்றாவது டக். அதுவும் மூன்றும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த கோல்டன் டக். இந்த முறை மூன்று முறை டக் அடித்ததோடு, அது கோல்டன் டக்காகவும் அமைந்து, இரசிகர்களைத் தாண்டி, பி.சி.சி.ஐ வரை விராட்கோலி அதிர்ச்சி அளித்து வருகிறார். விராட்கோலி ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு 2021 வரை மூன்று முறை மட்டுமே டக் அவுட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று டக்கும் 2014ஆம் ஆண்டு நடந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில், ஐ.பி.எல்-ல் வெவ்வேறு தொடர்களில் இரண்டுமுறை மூன்று டக் அடித்த வீரர் விராட்கோலிதான்!

- Advertisement -
- Advertisement -