கிளென் மேக்ஸ்வெல் வரவேற்பு நிகழ்ச்சியில் புஷ்பா பட பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
2084
Virat Kohli dances at Maxwell Wedding Reception

செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20/20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்தான முன்னாள் வீரர்களின் கருத்துகளும், அதனையொட்டிய விவாதங்களும், நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரை விட அதிகம் கவனம் பெற்றிருக்கின்றன!

காரணம், கடந்த முறை ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்த 20/20 உலகக்கோப்பையில் விராட்கோலியின் தலைமையிலான அணி முதல் சுற்றோடு படுமோசமாய் விளையாடி வெளியேறி இருந்தது. மேலும் தற்போதைய ஐ.பி.எல் தொடரில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங் பார்மும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்மும், முன்னாள் கேப்டன் விராட்கோலியின் பேட்டிங் பார்மும் கவலைக்குரிய விசயங்களாகத் தொடர்ந்து வருகிறது. இதுக்குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களின் கருத்துக்களையும், அறிவுரைகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதில் விராட்கோலி என்றுமில்லாத வகையில் தொடர்ந்து இருமுறை ஒரு ஐ.பி.எல் சீசனில் டக் ஆவதோடு, தொடர்ந்து இரு கோல்டன் டக் ஆகும் அளவுக்கு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியமே நேற்று, அவரது பேட்டிங் பார்ம் குறித்து கவலை தெரிவித்து இருக்கிறது!

- Advertisement -

ஆனால் இதையெல்லாம் தாண்டி, எந்த பிரசரையும் ஏற்றிக்கொள்ளாத விராட்கோலி, தற்பொழுது அணியினர் உடன் ஒரு பார்ட்டியில் ஆடி சந்தோசமாக இருக்கும் வீடியோ வெளிவந்திருக்கிறது. அதில் புஷ்பா பட பாடலான “ம் சொல்றியா மாமா? ம்கூம் சொல்றியா மாமா?!” பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அவரது இரசிகர்களால் மகிழ்வாகவும், நெகிழ்வாகவும் பகிரப்பட்டு வருகிறது!

- Advertisement -