இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறிய காயம் காரணமாக விராட் கோலி விளையாடாத நிலையில், இன்று இந்திய அணியை கேஎல் ராகுல் தலைமை தாங்கி வருகிறார். டாஸ் வென்ற கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் 20 ரன்களிலும், புஜாரா 3 ரன்களிலும், ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் 0 ரன்னுக்கு அவுட்டாகி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். பின்னர் கேஎல் ராகுல் மற்றும் ஹனும விஹாரி ஜோடி இணைந்து சற்று நிதானமாக விளையாடி வந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஹனும விஹாரி 20 ரன்களிலும்,கேஎல் ராகுல் 50 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தற்போது இந்திய அணி 51 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே குவித்து தடுமாறி வருகிறது. தற்பொழுது களத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் (24* ரன்கள் ) மற்றும் ரிஷப் பண்ட் (13* ரன்கள்) ஜோடி விளையாடி கொண்டிருக்கிறது.
ஜிம்னாஸ்டிக் வீரர் போல தன் உடலை வளைத்து தாவி கேட்ச் பிடித்த வான் டெர் டஸ்சென்
லுங்கி இங்கிடி வீசிய 32வது ஓவரின் 3வது பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹனும விஹாரி தவறான ஷாட் அடித்து அவுட் ஆக பார்த்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பந்தை டெம்பா பவுமா தவற விட்ட காரணத்தினால், அவுட்டாகாமல் ஹனும விஹாரி தப்பித்துக் கொண்டார்.
ஆனால் சில நிமிடங்கள் கழித்து காகிசோ ரபாடா வீசிய 39 ஓவரின் 4-வது பந்தில் வான் டெர் டஸ்செனின் சாமர்த்தியமான கேட்ச் மூலமாக இந்த முறை ஹனுமா விஹாரி 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். அந்த பந்து சற்று பவுன்சராக வந்தது. திடீரென வந்த பவுன்சர் பந்தை முற்றிலும் எதிர்பார்க்காத விஹாரி மேற்கொள்ள, அந்த பந்து எட்ஜ் ஆகி மேலே சென்றது.
That @Rassie72 catch 😍 #SAvIND #FreedomTestSeries #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/TKXjau1YkZ
— Cricket South Africa (@OfficialCSA) January 3, 2022
தலைக்கு மேல் சென்ற அந்த பந்தை ஸ்கொயர் லெக் திசையில் நின்று கொண்டிருந்த வான் டெர் டஸ்சென் ஜிம்னாஸ்டிக் வீரர் போல தனது உடலை வளைத்து லாவகமாக தனது இடது கையின் மூலமாக தாவி பிடித்தார். அந்த பந்தை அவர் எப்படி பிடித்தார் என்று ஒரு நொடி நம்மை யோசிக்க வைக்கும் விதத்தில் அந்த கேட்ச் இருந்தது. வான் டெர் டஸ்சென் கேட்ச் பிடித்த அந்த வீடியோவை தென்ஆப்பிரிக்கா அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நிலையில், அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.