விராட் கோலி – பேர்ஸாடோ இடையே வாக்குவாதம் ? விராட் கோலி நக்கலாக கூறியது இதுதான் – வீடியோ இணைப்பு

0
159
Virat Kohli and Jonny Bairstow

பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி வழக்கமான ஆட்டத்தை மாற்றி முற்றிலும் வித்தியாசமாக செயல்படுகிறது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை ஓயிட்வாஷ் செய்து இந்திய ரசிகர்களை பயத்தில் ஆழ்த்தியது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி ஜூலை 1ஆம் தேதி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

ரோஹித் ஷர்மா இல்லாததால் ஷுப்மன் கில்லுடன் புஜாரா களமிறங்கினார். ஆண்டர்சன் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நடையைக் காட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களுக்கு இளம் வேகப்பந்து வீச்சாளர் பாட்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்தை ஆடாமல் விட நினைத்த போது பேட்டின் நுனியில் பட்டு க்ளீன் போல்டானார்.

- Advertisement -

98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து பரிதவித்த அணியை இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் மீட்டனர். இருவரும் கைகோர்த்து 222 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய பண்ட் 146 ரன்களிலும் ஜடேஜா 104 ரன்களிலும் வெளியேற இறுதியில் கேப்டன் பும்ரா விரைவாக 16 பந்தில் 31 ரன்கள் அடித்து இந்திய அணியை 400 ரன்கள் கடக்கச் செய்தார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 84க்கு 5 என முடித்தது.

மேகமூட்டம் இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கிய அரை மணி நேரத்திலேயே விராட் கோஹ்லி தன் சேட்டையை ஆரம்பித்துவிட்டார். ஷமி வீசிய பந்தை ஆட முடியமால் விட்டுவிட்டார். அப்போது கோஹ்லி, “ பேர்ஸாடோவுக்கு பந்தைத் தவிர மற்ற அனைத்தும் கண்ணுக்குத் தெரியும் ” என நக்கலாக கத்தினார். இருவரும் அருகில் சென்று பேசினர் ஒழிய அது பெரிதான சண்டையாக மாறவில்லை. கோஹ்லி கையை நீட்டி ஏதோ பேச, பேர்ஸாடோ கண்ணில் கோபம் தெரிந்தது. அடுத்த பந்து ஸ்ட்ரெயிட்டாக சிக்ஸர் அடிக்க பேட்டை வீசினார். ஆனால் அதையும் அவர் மிஸ் செய்தார். அதைப் பார்த்த விராட் கோஹ்லி சிரிக்கத் தொடங்கி விட்டார். இதெல்லாம் பேட்ஸ்மேனின் கவனத்தை திசை திருப்பி விக்கெட் எடுக்க செய்யும் ட்ரிக்ஸ் ஆகும். விராட் கோஹ்லி அதில் வல்லவர்.

அது மட்டுமில்லாமல் நேற்றைய நாள் ஆட்டதிலயே பேர்ஸாடோவுடன் வம்பிழுதுவிட்டார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸின் 14வது ஓவரில், “ சவுதியை விட இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடுங்கள் ” என்று கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பேர்ஸாடோ தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து பிரம்மாண்ட சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

- Advertisement -