சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறிய உத்தப்பா ; திடீரென நோ பால் அறிவித்து திருப்பததை உண்டாக்கிய நடுவர் – வீடியோ இணைப்பு

0
695
Siraj No ball to Uthappa

2022 ஐ.பி.எல் சீசனின் 22-வது போட்டியில், ஜடேஜாவின் சென்னை அணியும், பாஃப்பின் பெங்களூர் அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதி வருகின்றன!

முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பாஃப், ட்யூ பிரச்சினையால் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி சென்னைக்குத் துவக்கம் தர வந்த ருதுராஜ் ஏமாற்ற, அடுத்து வந்த மொயீன் அலியும் ஏமாற்றினர்.

- Advertisement -

ஆனால் ஒருமுனையில் நின்ற உத்ப்பாவும், அவருடன் இணைந்த சிவம் துபேவும் ஆரம்பத்தில் பொறுமை காட்டி, பின்பு வெறும் சிக்ஸர்களால் பெங்களூர் அணியைப் புரட்டி எடுத்த விட்டனர். குறிப்பா உத்தப்பா பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் சிக்ஸர்களாக தெறிக்க ஆரம்பித்தன.

இந்த நிலையில் சிராஜின் 17-வது ஓவரில் முதல் பந்தைத் தவறவிட்ட உத்தப்பா, அடுத்த பந்தில் சிக்ஸர், அதற்கடுத்த பந்தில் சிக்ஸர், அதற்கும் அடுத்த பந்தில் பவுண்டரி என புரட்டியெடுக்க, ஐந்தாவது பந்தில் டீப்-ஸ்கொயர் லெக் திசையில் அடுத்த சிக்ஸருக்காக தூக்கியடித்த பந்தை, அறிமுக வீரரான சுயாஸ் பிரபுதேசாய் அபாரமாய் பிடித்து, உற்சாகமாகக் கொண்டாடினார்.

ஆனால் சிராஜிக்கு நேரம் சரியில்லாமல் அது நோ-பாலாக அமைய, கேட்ச்சை பிடித்து உற்சாகமாகக் கொண்டாடிய சுயாஸ் பிரபுதேசாய்க்கு பரிதாபமாக அமைந்து விட்டது. ஏற்கனவே உத்தப்பாவுக்கு மிகச்சிறப்பாக முயற்சி செய்து கேட்ச்சை தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -