தமிழ்நாடு பிரீமியர் லீக் : ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் ; வெறும் 15 பந்தில் அரை சதம் விளாசிய மும்பை வீரர் சஞ்ஜய் யாதவ் – வீடியோ இணைப்பு

0
213
Sanjay Yadav

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு தற்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட டெஸ்ட் ஆகும். இந்த டெஸ்ட் போட்டியின் முடிவில் தான் டெஸ்ட் தொடருக்கான முடிவு எட்டப்படும் என்ற நிலை உள்ளதால் இங்கிலாந்து இந்தியா என்று இருதரப்பு ரசிகர்களுமே இந்த டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் தமிழகத்தில் TNPL தொடர் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் என நான்கு முக்கிய நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நெல்லை அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் மதுரை அணி உள்ளது. தொடரின் ஏழாவது ஆட்டத்தில் நேற்று நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின.

- Advertisement -

நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் மழை குறுக்கிட ஆட்டம் தடைபட்டது. ஒரு வழியாக மழை நின்றதும் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணிக்கு விஷால் வைத்தியா மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் இணைந்து மிகவும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். 12 ஓவர்களில் இவர்கள் இருவருமே 8 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடி திண்டுக்கல் அணியை 130 ரன்கள் எடுக்க வைத்தனர்.

பின்பு களமிறங்கிய நெல்லை அணிக்கு ஸ்ரீ நிரஞ்சன் மற்றும் சூரிய பிரகாஷ் இணைந்து சற்று மோசமான துவக்கத்தையே கொடுத்தனர். ஐந்து ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து நெல்லை அணி தடுமாறிய போது, அப்பரஜீத் மற்றும் சஞ்சய் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். திண்டுக்கல் வீரர்களின் பந்துவீச்சை மிகவும் எளிதாக சமாளித்த இந்த இணை சிக்சர்களும் பவுண்டரிகளுமாக விளாசி தள்ளினர். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சஞ்சய், மோனிஷ் என்ற பந்துவீச்சாளர் வீசிய ஒன்பதாவது ஓவரின் கடைசி நான்கு பந்துகளை நான்கு சிக்ஸர்களாக மாற்றி நெல்லை அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். 19 பந்துகளில் 55 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் என மிகவும் சிறப்பாக விளையாடிய சஞ்சய் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரின் அடுத்த ஆட்டத்தில் வரும் நான்காம் தேதி திண்டுக்கல் மற்றும் திருப்பூர் அணிகள் மோத உள்ளன.