தோனிக்கு மனைவியாக இருப்பது அவ்வளவு எளிதில் அல்ல ; தன் வாழ்க்கையின் கசப்பான பக்கத்தை எடுத்துக்கூறும் சாக்ஷி தோனி – வீடியோ இணைப்பு

0
803
Sakshi Dhoni Family

கிரிக்கெட் வீரர்களில் ஒரு சிலர் காதல் திருமதோனி H ணம் செய்துள்ளனர். அதில் நம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். இந்திய அணிக்கு ஐசிசி உலக கோப்பை தொடர் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் மற்றும் ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடரில் என மூன்று வகை கோப்பைகளையும் பெற்றுத்தந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆவார்.

அவர் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி சாக்ஷி தோனியை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தோனி மற்றும் சாக்ஷி தம்பதி தங்களுடைய பெண் குழந்தைக்கு ஜிவா தோனி என்ற பெயரை சூட்டினர்.

சாக்ஷி தோனியின் பிரத்தியேகப் பேட்டி

மகேந்திர சிங் தோனி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரில் சென்று சாக்ஷி தோனி பார்ப்பார். மகேந்திர சிங் தோனியின் குழந்தையான ஜிவா தோனியும் சாக்ஷி தோனி உடனிருந்து நம் நிறைய போட்டிகளில் பார்த்திருக்கிறோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தற்பொழுது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் மகேந்திரசிங் தோனியுடன், அவரது மனைவி மற்றும் குழந்தை சென்னை அணி கேம்பில் உடன் இருக்கின்றனர்.

சென்னை அணி நிர்வாகம் எடுத்த ஒரு பிரத்தியேக பேட்டியில் சாக்ஷி தோனி தன் வாழ்க்கை சம்பந்தமாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.”கிரிக்கெட் வீரர்களுக்கு மனைவியாக இருப்பது சற்று கடினமானது. இயல்பான வாழ்க்கையை விட இது முற்றிலும் மாறுபட்டது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு நாம் அனுசரித்து போக வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.

அவர்கள் எதிர்பார்ப்பது போல நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்

மேலும் பேசிய அவர் சாதாரணமாக அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்க்கும் கணவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் பொழுது உங்கள் கணவர் அலுவலகத்திற்குச் செல்வார். அப்போது உங்களது வாழ்க்கை இயல்பானதாக இருக்கும்.

ஆனால் எங்களுடைய கணவர்கள் கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாட செல்கிறார்கள். எனவே நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு முன் இருந்த தனி உரிமை தற்பொழுது எங்களுக்கு கிடைக்காது. வெளியே செல்லும் பொழுது எங்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். கிரிக்கெட் வீரரின் மனைவி என்பதால் எங்களால் வெளியே பொதுமக்கள் கூடும் இடத்திற்கு சென்று நேரத்தை அவ்வளவாக செலவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.