ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 52வது போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் குஜராத் அணியும், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை அணியும், மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. குஜராத் அணியும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. மும்பை அணியில் ஹிர்த்திக்குற்கு பதிலாக அஷ்வின் முருகன் கொண்டுவரப் பட்டிருந்தார்.
இந்த முறை டாஸில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பரிசோதனை முயற்சியாக பேட்டிங்கை தேர்வு செய்யாமல், பீல்டிங்கையே தேர்வு செய்தார். மும்பை அணியின் இன்னிங்ஸை துவங்க வந்த கேப்டன் ரோகித் ஷர்மாவும், இஷான் கிஷனும் இந்த முறை நன்றாகவே விளையாடினார்கள். இருவருமே அரைசத்தை நெருங்கிய வேளையில் ஆட்டமிழக்க, நடுவில் களமிறங்கிய வீரர்கள் சொதப்ப, 200 ரன்கள் அடிக்க வேண்டிய மும்பை 178 ரன்களையே எடுத்தது. குறிப்பாக பொலார்டின் ஆட்டம் படு மந்தமாக இருந்தது. இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் 21 பந்துகளில் 44 ரன்களை குவித்ததால், ஓரளவு சவாலான இலக்கை எட்டியது மும்பை அணி.
இதற்கடுத்து 179 இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு, விர்திமான் சஹாவும், சுப்மன் கில்லும் அற்புதமான தொடக்கத்தைத் தந்தார்கள். இருவருமே அரைசதம் அடிக்க, குஜராத் அணி ஆட்டத்திற்குள் விக்கெட்டுகளை இழக்காமலே வந்துவிட்டது. இவர்கள் இருவரது விக்கெட்டையும் கைப்பற்றியவர் முருகன் அஷ்வின்.
இதற்கடுத்து களமிறங்கிய தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன் ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டார். ஆனால் அது மோசமான சாதனை. என்னவென்றால்; பொலார்ட் வீசிய பந்தை அடிக்க போய், ஸ்டம்ப்பை தாக்கி ஹிட் விக்கெட் ஆகிவிட்டார். இந்த ஐ.பி.எல் தொடரில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை இதன் மூலம் நிகழ்த்தி விட்டார்!
— Jemi_forlife (@jemi_forlife) May 6, 2022