ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 66வது போட்டியில், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், ஸ்ரேயாசின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கே.எல்.ராகுலின் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
லக்னோ அணி ஏறக்குறைய ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை உறுதி செய்திருக்க, கொல்கத்தா அணிக்கு நூலிழை அளவு ப்ளே-ஆப்ஸ்தான் வாய்ப்புதான் இருந்தது. இந்தப்போட்டியில் லக்னோ அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் ரகானேவிற்குப் பதிலாக அபிஜித் தோமர் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய, அது தவறான முடிவு என்று, லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டிகாக் மற்றும் கே.எல்.ராகுல் தங்கள் பேட்டிங்கின் மூலம் நிரூபித்தார்கள். ஆரம்பத்தில் அபிஜித் தோமர் குயின்டன் டிகாக்கிற்கு ஒரு கேட்ச்சை தவறவிட, குயின்டன் டிகாக் ஒரு புது ஐ.பி.எல் வரலாற்றை எழுதிவிட்டார்.
லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டிடாக் மற்றும் கே.எல்.ராகுல் தங்களின் சிறப்பான பேட்டிங்கால், கொல்கத்தா பந்துவீச்சாளர்களை தண்டித்தார்கள் என்றே கூறலாம். 70 பந்துகளைச் சந்தித்த அவர் அப்படியே இரட்டிப்பாக 140 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். பவுண்டரி சிக்ஸரில் மட்டுமே 100 ரன்கள் அடித்திருக்கிறார். ரஸலின் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்த அவர், அதை பேட்டில் குத்தி கர்ஜித்துக் கொண்டாட, மைதானத்தில் அமர்ந்திருந்த அவர் மனைவி, அவர்களின் குழந்தையைத் தூக்கிக் காட்டா கொண்டாடி உற்சாகப்படுத்தினார். குயின்டன் டிகாக்கிற்கு இதுதான் முதல் சதமாகும். மறுமுனையில் குயின்டன் டிகாக்கிற்கு ஒத்துழைப்பு தந்து ஆட்டமிழக்காமல் நின்ற கேப்டன் கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களோடு 68 ரன்கள் எடுத்தார்.
ஐ.பி.எல் வரலாற்றில் துவக்க ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இவர்கள் குவித்த 210 ரன்கள்தான். ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன் குயின்டன் டிகாக் அடித்த இந்த 140* ரன்கள்தான். இது ஒட்டுமொத்த ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ரன்னாகும். முதலிடத்தில் கிறிஸ் கெயில் 175, அதற்கடுத்து பிரன்டன் மெக்கல்லம் 140 இருக்கிறார்கள்.
Well played, QDK 💯
— IndianPremierLeague (@IPL) May 18, 2022
Live – https://t.co/NbhFO1ozC7 #KKRvLSG #TATAIPL pic.twitter.com/re4ZnUz82P