மீண்டும் கீப்பிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்க வீரரை வம்புக்கு இழுத்த ரிஷப் பண்ட் – வீடியோ இணைப்பு

0
132
Rishabh Pant and Van der dussen Banter

தென்னாபிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது டெஸ்ட் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் வென்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சித்து வருகிறது. மேலும் இந்த தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா மைதானத்தில் இந்திய அணியால் கைப்பற்றப்படும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பவுமா மட்டும் கீகன் பீட்டர்சன் இருவரும் அரைசதம் கடந்தனர். மறுபடியும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடும்போது இந்திய அணியின் ரிஷப் பண்ட் தென்ஆப்பிரிக்க அணியின் வாண்டர்டுசனை வாயை மூடிக்கொண்டு இரு என்று கோவமாக கூறினார். இப்படி கூறிய அடுத்த பந்தே மோசமான ஷாட் ஒன்று விளையாடி ஆட்டமிழந்தார் பண்ட். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு என 240 ரன்களை இலக்காக வைத்தது.

- Advertisement -

இதன் பின்பு தற்போது தென் ஆப்பிரிக்கா அணி அந்த இலக்கை துரத்தி வருகிறது. அதிரடியாக ரன் கணக்கை துவக்கிய மார்க்ரம் 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை ஷர்துல் தாகூர் அவுட் ஆக்கினார். அதன் பின்பு வந்த பீட்டர்சன் 28 ரன்கள் எடுத்து அஸ்வினிடம் ஆட்டமிழக்க வாண்டர்டுசன் களத்துக்குள் வந்தார். ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங்கில் போது ரிஷப் பண்ட் அவரிடம் வாய்ச்சண்டை போட்டிருந்தார். தற்போது மீண்டும் அவர்கள் களத்திற்குள் வந்ததும் ரிஷப் பண்ட், “பேட்டிங் ஃகார்டு பற்றிக் கூட இவருக்கு சரியாக தெரியவில்லை இவரெல்லாம் எப்படி 4-வது வீரராக ஒரு அணிக்கு களமிறங்குகிறார்” என்று கேட்டார் பண்ட்.

மேலும் இவர் மற்ற வீரர்களுடன் சண்டையிடுவதற்காக மட்டுமே அணியில் நீடிக்கிறார் என்றும் பண்ட் கூறினார். தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற தற்போது அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியும் நிலையில் வாண்டர்டுசன் கேப்டன் எல்கருடன் இணைந்து விளையாடி வருகிறார்.